பக்கங்கள்

17 செப்டம்பர் 2012

முஸ்லிம் காங்கிரஸ் இறுதி முடிவெடுக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே இன்று காலை திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது தெரிவித்தார். கொழும்பு பாக் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார். மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தன்னுடன் நாடாளுமன் உறுப்பினரான, மாவை சேனாதிராசாவும், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், செயலாளர் எம்.ரி.ஹசன் அலி, ஹாரிஸ் ஆகிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவிததார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம் மக்களும் ஆணையொன்றை வழங்கியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் சிறுபாண்மை அரசை நிறுவும் அந்த ஆணையை செயற்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் கோரப்பட்டதாகவும், அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை கூட்டமைப்பின் கோரிக்கையை முன்வைத்து கலந்துயயாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.