அமைச்சர் ரவுப் ஹக்கீம் மக்களுக்கு ஒருமுகத்தினையும் ஜனாதிபதிக்கு இன்னொரு முகத்தினையும் காட்டி அரசியல் நாடகம் நடத்துகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாளுக்கு நாள் அரசுக்கு எதிராக மக்கள் அலை பெருகியுள்ள நிலையில் கிழக்கு மாகாணத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தினை விமர்சித்துக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்,அவர்களுக்காக குரல் கொடுப்போம் எனக்கூறி அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பகலில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்கப்படும் போது எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இரவிலே ஜனாதிபதியின் வீட்டுக்குப்போய் அவரின் காலில் மண்டியிட்டுக் கொள்கின்றனர்.இதுதான் இன்றைய முஸ்லிம் அமைச்சர்களின் நிலை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.