இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்பாணத்தில் தொழில் ஆரம்பிப்பதற்கு மதுரை வர்த்தர்களுக்கு, யாழ் வர்த்தகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க உறுப்பினர்கள், முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன் தலைமையில், கொழும்பு சென்றனர். அங்கு, சிலோன் வர்த்தக சங்க பிரதிநிதிகளை சந்தித்தனர்.
வர்த்தக வளர்ச்சி, தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் வேளாண்மை உற்பத்திப் பொருட்களின், தொழில் வணிக மேம்பாட்டுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.
காய்கறி, பழங்களை, பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, பேக்கிங் செய்யும் தொழிற்சாலைகளை மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் துவக்கவும், கொழும்புவில் ஹோட்டல் கட்டுவதற்கு தயாராக உள்ளதாகவும் தமிழக வர்த்தக குழுவினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரன் பேசுகையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் யாழ்பாணத்தில் தொழில் வணிக வளர்ச்சி, வேலைவாய்ப்பு இல்லை.
அங்கு தொழில் துவங்க வேண்டும். தற்போது, பெரும்பாலான பொருட்கள் கொழும்பு நகரில் இறக்குமதியாகிறது. அங்கிருந்தே யாழ்பாணம் அனுப்பப்படுவதால், அவற்றின் விலை அதிகமாகிறது. பொருட்களை நேரடியாக யாழ்பாணத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்,´´ என்றார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மதுரை வர்த்தகர்கள் உறுதியளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.