பக்கங்கள்

22 செப்டம்பர் 2012

மக்களை ஏமாற்றிவிட்டதால் ஊர் திரும்ப அஞ்சும் மு.காவினர்!

வாக்களித்த மக்களின் விருப்புக்கு மாறாக மு.கா., அரசுடன் இணைந்து கொண் டதையடுத்து அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தமது சொந்த ஊர் செல்லமுடியாமல் கொழும்பில் திண்டாடுகின்றனர். கிழக்கு முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகளை நடந்து முடிந்த தேர்தலில் மு.கா. பெற்றுக்கொண்டது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமாயின், மு.காவுக்கு வாக்களியுங்கள் என்று கூறி மக்களின் உணர்வலைகளைத் தூண்டி வாக்குகளைச் சூறையாடிய மு.கா. அனைத்தையும் மறந்து அரசிடம் சரணாகதியடைந்தது. இப்போது மக்கள் விழிப்படைந்துவிட்டதை மு.கா. எம்.பிக்களும், மாகாணசபை உறுப்பினர்களும் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். இதனால் பீதியடைந்த இவர்கள், சொந்த ஊர் திரும்பமுடியாமல் தவியாய்த் தவிக்கின்றனர். கொழும்பிலிருந்தவாறே தமது மனைவி, மக்கள், குடும்பத்தினருடன் தொலைபேசி வாயிலாக உரையாடியே ஊர் நிலைமைகளை அறிகின்றனராம். மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள மு.கா. உறுப்பினர்கள் கொழும்பில் தங்குவதற்கு இடமின்றியும், போதியளவு பணமின்றியும் திண்டாடுகின்றனர் என அறியமுடிகின்றது. நிலைமை இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் கூட்டமைப்புடன் சேர்ந்திருக்கலாம் என்றாராம் ஒரு புதிய மாகாணசபை உறுப்பினர். மக்களைத் தம்பக்கம் எப்படி மாற்றலாம்? அரசுடன் இணைந்ததற்கு என்ன நியாயங்களைக் கூறலாம்? என்றெல்லாம் இப்போது இவர்கள் ஆராய்கின்றனர் எனத் தெரியவருகின்றது. ஊடக அறிக்கைப் படலங்களும் தயாராகுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. "மக்கள் என்ன மடையர்களா? இன்னும் இன்னும் இவர்களின் கோமாளித்தனத்துக்கு ஆட'' என்று கேட்கிறார் ஒரு பொதுமகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.