பக்கங்கள்

01 செப்டம்பர் 2012

பிள்ளையானுக்கு பின்னால் திரியும் முனைக்காட்டு பச்சோந்திகளுக்கு வித்தாகிப்போன மாவீரர்களின் மடல்!

அற்பசொற்ப எலும்புத்துண்டுக்காக பிள்ளையானுக்கு பின்னால் சில முனைக்காட்டு பச்சோந்திகள் திரிவது குறித்து வித்தாகி போன மாவீரர்கள் சார்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை இங்கு பிரசுரம் செய்கிறோம். அன்பார்ந்த முனைக்காடு வாழ் எம் இனிய உறவுகளே! நாம் உங்கள் மண்ணில் ஊரில் பிறந்து இளம் வயதில் விடுதலைப் போரில் உயிர் நீத்து வித்தாகிப் போன மாவீரர்களாகிய வீமன், பயில்வான், தளபதி சாந்தன், கரும்புலிகள் உட்பட 309 மாவீரர்களும் எம் மூச்சுக் காற்றோடு கண்ணீரையும் சேர்த்து உங்களோடு உரிமையோடு பேசுகின்றோம். வீர மீசை முறுக்கி வீமன், பயில்வான் படை நகர்த்தி பெருமை சேர்த்த முனைக்காடு பூமி இது. ஈனர்களின் கோர வெறியாட்டத்தால் எங்கள் கல்லறைகளில் கூட நிம்மதியாகத் தூங்க முடியாத எமக்கு துரோகிகளின் நயவஞ்சக வலையில் சிக்கி எம்மினத்திற்கும் கிராமத்திற்கும் இழிவு ஏற்படுத்தும் வரலாற்றுத் தவறை விடுவதற்கு தயாராகி வருகின்ற செய்தி எம் காதுகளில் ஈயத்தைக் காச்சி ஊற்றுவது போல் இருக்கின்றது. ஒரு விளையாட்டு மைதானம் எங்கள் தியாகத்திற்கு ஒப்பாகுமா? நாம் சிந்திய செங்குருதியால் செம்மண்ணாகிப் போன நம் பூமியில் கிறவல் கறைக்காய் பிறழ்வு நடத்தை காட்டும் பேயராய் அலைவதை விட்டு விடுங்கள். யுத்த வேள்வியில் உமக்காக உயிரைத் துறந்து எம் ஆசை நிறைவேறாது அலைந்து திரியும் எமது ஆவிகள் நீங்கள் பிள்ளையான் காட்டிய இசைக் கும்மாளத்தில் திளைத்திருந்ததை பார்த்து எமது ஆவிகள் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு தலைகுனிந்தது. எம் கல்லறைகளைக் கூட இடித்தழித்து இரும்பு பாதணிகளால் எம்மை மிதித்து எட்டடுக்கு மாளிகை கட்ட நினைக்கும் கெட்ட எலும்புத் துண்டு அரசியல் வாதிகளின் பின்னால் பக்க பலமாய் நிற்பதை தயவு செய்து நிறுத்தி விடுங்கள். மாவீரர்களாகிய நாம் சிந்திய குருதிக்கும் எம் மக்கள் வடித்த கண்ணீருக்கும் நீங்கள் தலைசாய்ப்பீர்களாக இருந்தால் கடமையின் பால் கடவுளால் ஈர்க்கப்பட்ட எங்களின் நல்வாழ்த்துக்கள் என்றென்றும் உமக்கு உரிதாக்கும் இல்லையேல் எங்களின் ஆவிகள் கூட பாவிகளாகிய உம்மை மன்னிக்காது. முதலைக்குடாவின் மூற்கர்கள் சிலர் விட்ட தவறுக்காக முழு இனத்திற்கும் துரோகம் செய்து இருக்கின்ற இறுதி சந்தர்ப்பத்தை காட்டிக் கொடுத்து மாவீரர் எங்களின் தூய தியாகத்தை அவமதித்து விடாதீர்கள். நாம் மூச்சுவிடும் போது முணுங்கில் வாக்கியத்தை கையிலெடுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு (வீட்டு சின்னம்) உங்கள் வாக்குகளைச் செலுத்தி எமது ஆத்மா சாந்தி பெற உழையுங்கள். ‘வித்தாகிப் போன முனைக்காடு மாவீரர்கள்.’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.