பக்கங்கள்

20 செப்டம்பர் 2012

விஜயராஜ் எந்த அமைப்பு? :முரண்பட்ட சில தமிழ் அமைப்புகள்!

ராஜபக்சே வருகையை கண்டித்து தீக்குளித்து இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் எந்த அமைப்பு என்பதில் போட்டா போட்டி நடந்தது. சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் உறுப்பினர் என இறப்பதற்கு முன் நக்கீரனிடம் விஜயராஜ் சொல்லியிருந்தாலும் 'அவர் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் அல்ல' என மறுத்துள்ளது சி.பி.எம் கட்சி.' அண்ணன் சீமான் மடியில் தான் உயிர் பிரிய வேண்டும் என விஜயராஜ் கூறினார்' என நாம் தமிழர் கட்சியினர் ஒரு வதந்தியை பரப்பினர். அதோடு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் 'காலை பத்து மணிக்கு அண்ணன் சீமான் தலைமையில் இறுதி ஊர்வலம்' என அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வர இது அங்கிருந்த மற்ற தமிழ் அமைப்புகளை கடுப்பாக்கியது. அவர்கள் எதிர்ப்பை காட்டினர். விடுதலை சிறுத்தைகளோ அவர் இறப்பதற்கு முன்பே காலையிலேயே 'விஜயராஜ் எங்கள் அமைப்பில் இருந்துள்ளார் 'என ஆதாராமாக அந்த வார்டில் அவர் பொறுப்பில் இருந்த பெயரை நகல் எடுத்து அணைத்து பத்திரிக்கையாளர்களிடமும் தந்தனர். மேலும் தொலைபேசியில்,கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம் 'தலைவரே விஜயராஜ் நம்ம கட்சியை சேர்ந்தவர். நாங்க தான் முன் இருந்து அணைத்து போராட்டத்தையும் நடத்தி வருகிறோம்' என்றபடி கூற 'அவரோ பத்திரிக்கையில் வேறு மாதிரி வருகிறதே' என்றபடி போனை துண்டித்தார். விஜயராஜ் எந்த அமைப்பை தான் சேர்ந்தவர்? என அவர் அண்ணன் தேவராஜ், தங்கைகள், பெற்றோர்களிடம் கேட்டோம். 'நான் திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் என் தம்பி வை.கோ,சீமான் என அனைத்து கூட்டங்களுக்கும் செல்வான். ஆனால் எந்த அமைப்பையும் சேராதவன் அவன். அமைப்புசாரா தமிழ் உணர்வாளர் அவனை தமிழன் என அடையாளபடுத்துவதே அவன் தியாகதிற்கான அங்கீகாரமாக இருக்கும்' என்றார் கண்ணீரோடு. இதையே அனைவரும் வழிமொழிந்தனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.