பக்கங்கள்

26 செப்டம்பர் 2012

முஸ்லீம் காங்கிரஸாரின் வீடுகள் மீது குண்டுத்தாக்குதல்!

முஸ்லிம் காங்கிரஸ் உப தலைவர் மற்றும் அக்கட்சியின் மாநகரசபை உறுப்பினர் ஒருவரது வீடுகளின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். கல்முனை சாய்ந்தமருது முதலாம் பிரிவு, ஒராமிக் பாசா வீதியிறுள்ள முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவர் அப்துல் மஜித் மற்றும் சாய்ந்தமருது மூன்றாம் பிரிவு, மாவடி வீதியில் அமைந்துள்ள அக்கட்சியின் மாநகர சபை உறுப்பினர் பிரதோஷ் ஆகியோரது வீடுகளின் மீதே பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலின் காரணமாக இவர்களது வீடுகளிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.