பக்கங்கள்

03 செப்டம்பர் 2012

றவுடி அமைச்சர் மேர்வினின் எச்சரிக்கையினையும் மீறி முன்னேஸ்வரத்தில் பலி பூஜை!

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மிருக பலி பூஜை திட்டமிட்டவாறு எதிர்வரும் 16ம் திகதி நடைபெறும் என பிரதம குரு காளிமுத்து சிவபாதசுந்தர குருக்கள் தெரிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த மிருகபலி பூஜை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலையீட்டையடுத்து நிறுத்தப்பட்டது. அதற்கு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கபிலவஸ்து வடமத்திய மாகாணத்தில் உள்ள புனிதப் பண்டம் காட்சிப்படுத்தும் காரணத்தினால், கடந்த 1ம் திகதி நடைபெறவிருந்த மிருக பலி பூஜை ஒத்தி வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மிருகபலி பூஜை ஒத்தி வைக்கப்பட்டதாக சிவபாதசுந்தர குருக்கள் தெரிவித்துள்ளார். கபிலவஸ்து புனிதப் பண்டம் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் நாட்டில் நடைபெற்று வருகின்றது அதன் தருணத்தில் கடந்த முதலாம் வடமத்திய மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டது. கபிலவஸ்த்தை மக்கள் தரிசிக்கும் தருணத்தில் உயிர்க் கொலை செய்வது பாவமானது அதனால் மிருகபலி பூஜை நிறுத்துமாறு ஜனாதிபதி கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் படி கோயில் நிர்வாகமும் இணங்கியதையடுத்து கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த மிருகபலி பூஜை நிறுத்தப்பட்டது. எனினும் எதிர்வரும் 12ம் திகதியுடன் புத்த பெருமானிக் கபிலவஸ்து தரிசனம் வடமத்திய மாகாணத்தில் நிறைவடையும். அதன்படி, மீண்டும் எதிர்வரும் 16ஆம் திகதி மிருக பலி பூஜைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலய பிரதம குரு அறிவித்துள்ளார். இதேவேளை பல்வேறு அரசியல் கட்சிகள் குறித்த மிருகபலி பூஜைக்கு எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். ஹெல உறுமய, மேர்வின் போன்றோர் மிருகபலியை நிறுத்து மாறு ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பியிருந்தனர். ஏனெனில் மிருகபலி பூஜையினை ஜனாதிபதி நிறுத்துமாறு கூறினால் மட்டுமே நிறத்துவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே பிரதம குரு அறிவித்திருந்தார். அதனையடுத்தே பல கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதத்தினை அனுப்பி இருந்தனர். அத்துடன் ஜனாதிபதியின் கோரிக்கையினை அடுத்து பலி பூஜை நிறுத்தப்பட்டதனையடுத்து இவ்வாண்டு மிருகபலி பூஜை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் திட்டமிட்ட படி வருடாந்த மிருகபலி பூஜை நடைபெறும் என ஆலய நிர்வாகம் மீண்டும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.