பக்கங்கள்

25 செப்டம்பர் 2012

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பெண்கள்,சிறுவர்கள் கண்ணீர்!

newsபலத்த எதிப்புக்கும் மத்தியில் செட்டிகுளம் நலன்புரி முகாமில் தங்கி யிருந்த கேப்பாபிலவு, மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 361 குடும்பங்களும் நேற்றுத் திங்கட்கிழமை இராணுவத்தினரால் பலத்த பாதுகாப்புடன் வற்றாப்பளைக்கு கொண்டுவரப்பட்டனர்.பலவந்தமாக இந்தக் குடும்பங்கள் முல் லைத்தீவு மாவட்டத்தின் கைவேலி மற்றும் வற்றாப்பளை மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றித் தங்கவைக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லா மையால் தாம் அங்கு பெரும் அவலப்பட்டுக் கொண்டிருந்ததாக அந்த மக்கள் உதயனுக்குத் தெரிவித்தனர். நேற்றுக்காலை செட்டி குளம் நலன்புரி நிலையத் துக்குச் சென்ற இராணு வத்தினரும் அரச அதிகாரி களும் அங்கிருந்த மக் களை வெளியேற்றுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அங் கிருந்த மக்கள் பஸ்களில் ஏற்றப்பட்டார்கள். அவர்களுடைய பொருள்கள் அனைத்தும் லொறிகளில் ஏற்றப்பட்டன. முதலில் மந்துவில் கிராமத்தைச் சேர்ந்த குடும் பங்கள் அங்கிருந்து பிற்பகல் ஒரு மணியளவில் முல்லைத்தீவு நோக்கிக் கொண்டு செல்லப்பட் டன. இந்தக் குடும்பங்கள் புதுக்குடியிருப்பு கைவேலி என்ற இடத்தில் மர நிழல்களின் கீழ் நேற்று மாலை 5 மணியளவில் இறக்கிவிடப்பட்டன. அந்தக் குடும்பங்கள் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் மர நிழல்களிலேயே தமது பொழுதைக் கழித்தன. இந்த மக்களுக்கான உணவு வசதிகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஏனைய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமையால் அந்தக் குடும்பங்கள் பெரும் நிர்க்கதியான நிலையில் அவலப்பட்டுக் கொண்டிருந்தன. இதன்பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் கேப்பாபுலவு கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் செட்டிகுளம் முகாமில் இருந்து ஏற்றிவரப்பட்டன. இந்த மக்கள் வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கும் உணவு வசதி மாத்திரமே ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஏனைய அடிப்படை வசதிகள் இல்லாமையால் அங்கு பெண்களும், சிறுவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தம்மை சொந்த இடங்களான கேப்பாபுலவு, மந்துவில் பகுதிகளில் இன்று குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினர் தம்மிடம் கூறியதாக அந்த மக்கள் தெரிவித்தனர். செட்டிகுளம் அகதி முகாமில் இருந்து மக்களை வெளியேற்றிய பின்னர் அங்கிருந்த அனைத்துக் கட்டடங்களையும் படையினர் தகர்த்து நிர்மூலமாக்கியதாக மக்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.