'பென்ஸ்' விலையைக் குறைத்த அரசாங்கம் டின் மீனின் விலையைக் குறைக்கவில்லையே? என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கோட்டையில் இன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "தேர்தலில் தோல்வியடைகிறோம் என நினைக்காமல் ஒன்றுமையாகச் செயற்பட்டு கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு முன்வர வேண்டும் கட்சியின் தோல்வி பற்றி பேசும்போது ஆளுமையும் திறமையும் நிறைந்த வேட்பாளர்ளின் குறைபாடு பற்றியும் சிந்திக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தகுதியுள்ள எவரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக எமக்கு விண்ணப்பிக்கலாம்." என்றார். அவர் தனது உரையின் இறுதியில், "பென்ஸ் காரின் விலையைக் குறைத்த அரசாங்கம் டின் மீனின் விலையைக் குறைக்கவில்லை. மக்கள் எவ்வளவு சுமையைத்தான் தாங்கிக்கொள்வார்கள்? நாட்டில் என்னென்னவோ நடக்கிறது" எனக் கிண்டலாகத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.