ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளோடு இலங்கை அரசு இந்திய திரைப்பட விழாவை கொழும்பு நகரில் நடத்தியது. எதிர்பார்ப்பு அத்தனையும் தவிடுபொடியானதால் உலக அளவில் இலங்கை அரசுக்கு அவப்பெயர் வந்துள்ளது.
இந்த விழாவுக்காக பொதுமக்களின் பணம் சுமார் 450 மில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கம் இதற்காக செலவிட்டுள்ளது. மேலும் ஆதரவாளர்களின் பணம் சுமார் 250 மில்லியன் செலவிடப்பட்டுள்ளன. சுமார் 4 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்ப்பார்த்தே இத்தனை செலவுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
முன்னணி நட்சத்திரங்கள் யாரும் கலந்துகொள்ளாததால் விழா களையிழந்து போனது.
இந்த விழாவுக்கு 5000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் 2000 க்கும் குறைவானவர்களே வந்துள்ளனர். இன்னொரு கொடுமை என்னவென்றால், அவர்களில் பலர் இலவச அனுமதியுடன் வந்தவர்கள்.
இந்த விழா வெற்றி பெற்றால் சுற்றுலாத்துறைக்கு அது சாதகமாக அமையும். சுற்றுலாத்துறையினர் வருகை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பும் தவிடுபொடியாகிவிட்டது.
இதனால் உலக அளவில் இலங்கை அரசுக்கு அவப்பெயர் வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.