அன்பார்ந்த புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளே! சிறப்பாக யேர்மன் வாழ் தமிழீழ மக்களே! இறுதி யுத்தத்தில் கொடூரமான முறையில் கொத்துக் கொத்தாக எங்கள் மக்களை கொன்று குவித்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை யேர்மனியிலிருந்து உடனடியாக வெளியேற்ற அணிதிரள்வோம்.
இறுதி யுத்தத்தின் ஆரம்ப நேரத்தில் 57ஆவது படையணியின் நேரடி கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டு, மேற்கு வன்னியூடாக படைகளை முன்னகர்த்தி மன்னார் ஊடாக கிளிநொச்சியைக் கைப்பற்றி அதனூடாக இராமநாதபுரம், விஸ்வமடு கைப்பற்றப்பட்டது.
இம் முன்னகர்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்மூடித்தனமாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் பொறுப்பில் கொல்லப்பட்டார்கள். இவ்வாறான போர்க்குற்றவாளியை பாராட்டும் முகமாக சிங்கள அரசு மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை யேர்மனியில் இலங்கை துணைத்தூதராக நியமித்து அனுப்பியுள்ளது.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் உத்தியோகபூர்வமாக யேர்மனியில் இலங்கை துணைத்தூதராக பதவி வகித்தாலும் உண்மையில் இவருடைய நியமனம் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களுக்கு எதிரான போரை ஆரம்பிப்பதற்காகவே இராஜதந்திரமாக ஒழுங்கு செய்யப்பட்டது.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமனத்திற்கு பின்பு யேர்மனியிலும் ஏனைய சில நாடுகளிலும் தமிழீழ உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். அத்தோடு தமிழீழ மக்களுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களை அடக்கும் முகமாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
சிறப்பாக பேர்லின் வாழ் தமிழ் மக்களுக்கு இலங்கைத் தூதரகத்திற்கு செல்லும் வேளையில் „Army Checkpoint“ முறையில் பல சிக்கல்களும், கேள்விகளும், பயமுறுத்தல்களும் எழுப்பப்படுகின்றது.
இவ்வாறான போர்க்குற்றங்களைப் புரிந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை வெளியேற்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமன் (International Human Rights Association Bremen e.V.) அவர்களால் அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளில் ஒன்றாக „தபால் அட்டை எதிர்ப்பு“ யேர்மன் உள்விவகார அமைச்சுக்கு ஆயிரங்கணக்கான யேர்மனி மக்களாலும் தமிழ் மக்களாளும் அனுப்பப்படுகின்றது. அத்தோடு மேஜர் ஜெனரல் ஜகத் டயஸக்கு எதிரான கண்டன பிரசுரங்கள் 1 இலட்சத்திற்கும் மேலாக வெளியிடப்பட்டுள்ளது.
இந் நடவடிக்கைகளில் தயவுசெய்து அனைத்து தமிழ் மக்களும் கலந்துக்கொள்ளவும்! அத்தோடு சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமனுக்கு எம் ஆதரவையும் வழங்கவும்.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் எதிர்பின் மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணையத்தளத்தை தொடர்புக்கொள்ளவும்: http://www.humanrights-server.org/
ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் யேர்மன் மொழியிலும் பிரதியாக்கம் செய்திருக்கும் கண்டனப் பிரசுரங்களை தொகையாகப் பெற்றுக்கொள்ள பின்வரும் மின்னஞ்சல் முகவரியை தொடர்புக்கொள்ளவும்: justicefortamilsinsrilanka@googlemail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.