இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற் போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யு கூறியிருக்கிறார். லீ குவான் யுடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த நூலில் இலங்கை இனச்சிக்கல் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார். இலங்கை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.
தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது என்று லீ குவான் யு கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழர்கள் வாழும் பகுதிகளை தனியாகப் பிரித்து தமிழீழம் அமைக்கவேண்டும். அதுதான் இலங்கை இனச் சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்ற கருத்தை லீ குவான் யு ஆதரித்திருக்கிறார்.
இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடு தலைப் புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்கமாட்டார்கள் சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவ ரது மனதை மாற்றவோ அல்லது அவரைத் திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.