பக்கங்கள்

04 ஜூன் 2010

நான் இலங்கை செல்லவில்லை,ஜெனிலியா மறுப்பு!


பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா டிஸூஸா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் நடித்துள்ளார்.விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் நாயகிகளில் இவரும் ஒருவர். தமிழில் அறிமுகமானாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில்தான் இவர் நடித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த இவர் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை காதலிக்கிறார்.
ஐஃபா விழாவுக்கு ரிதேஷ் தேஷ்முக்கும் சென்றுள்ளார். எனவே காதலர் வழியில் ஜெனிலியாவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவுக்குப் போவதன் மூலம் தென்னிந்திய திரையுலகை பகைத்துக் கொள்ள முடியும் என்று தெரிந்தும் அவர் பங்கேற்றுள்ளார் என்று இலங்கை செய்திகள் தெரிவித்தன.
இதையடுத்து தமிழுணர்வாளர்கள் கொதித்தெழுந்தார்கள்.இதனால் அவருக்கு தென்னகத்தில் ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஜெனிலியா தான் இலங்கை செல்லவில்லை என்று மறுத்துள்ளார்.
இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனார் ஜெனிலியா. ’’ நான் ஐஃபா விழாவுக்குப் போனதாக வந்த தகவல் தவறானது. ஐயோ...நான் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை. உண்மையில் நான் சாயிஃப் அலிகான் மற்றும் ஷாரூக்கானுடன் மேடையில் நடனம் ஆடுவதாக இருந்தது. மனீஷ் மல்ஹோத்ராவுடன் ரேம்ப் வாக் பண்ணவும் ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் தமிழர் போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பார்த்த பிறகு நான் வி்லகிக் கொண்டேன்.
நான் தமிழில் அறிமுகமானவள். தமிழ் சினிமாவை நேசிக்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் ஆசை உள்ளது.
இன்னும் இரு தினங்களில் சென்னை வருகிறேன். தனுஷுடன் உத்தம புத்திரன் படத்தில் நடிக்கிறேன்.
தற்போது நான் மும்பையில்தான் இருக்கிறேன். நம்பிக்கை இல்லையென்றால் மும்பை வந்து பார்த்துக்கொள்ளுங்கள்.நான் தமிழரையும் தமிழ் உணர்வுகளையும் மதிக்கிறேன். நான்
ஒருபோதும் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.