பக்கங்கள்

04 ஜூன் 2010

ஜெனிலியா நடிக்கும் படங்களுக்கு தடை!


இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு நடிகர் நடிகைகள் செல்லக்கூடாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட அனைத்து திரைப்பட அமைப்புகளும் வற்புறுத்தின. இதனை ஏற்று ரஜினி, கமல், அமிதாப்பச்சன், ஷாருக்கான், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் விழாவுக்கு போகவில்லை. தமிழ் நடிகர், நடிகைகள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தனர். இதனால் பட விழா படுதோல்வி அடைந்தது. ஆனாலும் தடையை மீறி சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், விவேக் ஓபராய், சஞ்சய் தத், ரித்தேஷ் தேஷ்முக், நெயில் நிதின் முகேஷ், போன்ற சிலர் கலந்து கொண்டனர். நடிகை ஜெனிலியாவும், காதலர் ரிதேஷ் தேஷ்முக்குடன் விழாவில் பங்கேற்றார். இவர்களின் படங்களுக்கு தென்னிந்திய திரையுலகம் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. தியேட்டர் அதிபர்கள், இந்த நடிகர் நடிகைகளின் படங்களை திரையரங்குகளில் திரையிடமாட்டார்கள். தமிழில் பல படங்களில் நடித்துள்ள ஜெனிலியா மும்பையை சேர்ந்தவர். பாய்ஸ் படத்தில் அறிமுகமான இவர் தற்போது தனுஷ் ஜோடியாக உத்தம புத்திரன் படத்தில் நடித்து வருகிறார். இலங்கை பட விழாவில் பங்கேற்றதால் உத்தம புத்திரன் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய படங்களுக்கு ஜெனிலியாவை ஒப்பந்தம் செய்வதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜெனிலியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கமும் தயாராகி வருகிறது. இலங்கை படவிழாவில் பங்கேற்றவர்கள் பற்றி பெப்சி தலைவர் வி.சி.குகநாதனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: இலங்கையில் நடைபெறும் படவிழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தென்னிந்திய திரையுலகின் அனைத்து அமைப்புகளும் கேட்டுக்கொண்டன. அதை ஏற்று பலபேர் அவ்விழாவுக்கு செல்லவில்லை. எங்கள் வேண்டுகோளுக்கு மரியாதை கொடுத்து அமிதாப்பச்சன், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கரெல்லாம் விழாவுக்கு போகவில்லை. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் வேண்டுகோளை மதிக்காமல் அந்த மயான பூமியில் நடந்த விழாவில் சில சில்லரை நடிகர் நடிகைகள் பங்கேற்று உள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். அது தொடரும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.