பக்கங்கள்

07 ஜூன் 2010

கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டினுள் சடலங்கள்.



சிறீலங்கா படைகளினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின் போது சேதமடைந்த கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டை துப்பரவு செய்தபோது ஆறு உடல்களின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்தவாரம் அக்கட்டிட இடிபாட்டை துப்பரவு செய்தவர்கள் உடல்களை கண்டதும் சிறீலங்காப் படையினரிடம் தெரிவித்துள்ளனர். அவ்விடத்திற்கு வந்த படையினர் கட்டிட இடிபாட்டை துப்பரவு செய்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியதுடன், இது தொடர்பான தகவல்கள் வெளிவருவதையும் தடுத்துள்ளனர். அண்மையில்தான் கிளிநொச்சி கணேசபுரத்தில் அழுகிய நிலையில் ஐந்து உடல்கள் கண்டு எடுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விதமாக தமிழர்களின் உடல்கள் வெளிவருவது சிறீலங்கா அரசு தமிழினத்தின் மீது மேற் கொண்ட இன அழிப்பை காட்டி நிற்கிறது. இவ்விதம் உடல்கள் வெளிவருவதால் மக்கள் பெரும் பயப்பீதியுடன் காணப்படுகின்றனர். நாம் நித்தமும் சாகிறோம் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.