வல்லரசு ஒன்றின் உதவியுடன் பயிற்சி பெறும் 5000 புலிகள், கடந்த மே பதினெட்டாம் திகதிக்கு பிறகு தமிழ் ஈழ விடுதலை புலிகளின் ஆயுத பலம் சிதைக்க பட்டு அழிக்க பட்டு விட்டதாக சிங்களம் பறை சாற்ற அதன் அமைப்பின் போராளிகளோ தமது தாக்குதல் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றனர் .அவர்களின் உரையாடலில் அடிகடி ஒலிக்கும் சங்கேத வார்த்தை,வேகமாய் புக்கை பொங்குவோம் என அந்த சங்கேத வார்த்தை ஒலிக்கிறது .இவ்வாறு கடந்த மாத பகுதியில் கொழும்பு மற்றும் அதன் வெளி மாவட்டங்களில் வைத்து புலிகளின் பொட்டு அம்மான் புலனாய்வு துறை போராளிகள் சிலர் கைது செய்ய பட்டுள்ளனர் .இவர்களின் கைதின் போதே இந்த தகவல் அரச படைகளின் காதுகளுக்கு எட்டியுள்ளதாம்,இவ்வாறு வன்னி பகுதியில் சில போராளிகளுக்கு உணவு வழங்கிய குடும்பம் ஒன்று கோரமாக வெட்டி கொலை செய்ய பட்டு கிணற்றுக்குள் வீச பட்டதாக தெரியவந்துள்ளது .ஆசிய நாடொன்றில் தமது தேச விடுதலைக்காக ஐயாயிரம் போராளிகள் பயிற்சி பெற்று வருகின்றனராம் .இவர்களுக்கு பயிற்சி அளிப்பது வல்லரசு ஒன்றின் உளவு படையாம் .இதுவே உள் வட்டாரங்களில் பிரபலமாக பேசப்படும் செய்தி .நமது தொடர்புகட்கு வந்த சிலரும் இந்த தகவலை நமக்கு தெரிவித்தனர் .ஆழஊடுருவி எதிரியின் முக்கிய நிலைகளை தாக்கி அழித்தல். மற்றும் நிலங்களை மீட்டு தக்கவைத்தல் போன்ற திட்டமிடல்களுடன் இவர்களுக்கு நவீன ஆயுத பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .இலங்கை தவிர்ந்த பிற நாடுகளில் மக்களின் ஏகபோக ஆதரவு புலிகளுக்கு தொடர்ந்தும் இருக்கிறது .பணம் மற்றும் ஊடக வெகுஜென தொடர்புகள் புலிகளுக்கு ஆதரவாக இருக்கும் வரை அந்த அமைப்பு அழியாது என்பது உலக வரலாற்றின் பொது விதி .கேட்கும் போது நமக்கு இனிப்பாய் இருந்தது இந்த செய்தி ..எப்போது இவை நடந்தேறும் என்பதே பல மில்லியன் டாலர் கேள்வி ..இந்த விடயத்தை நம்புவதும் நம்பாமல் விடுவதும் மக்களே உங்கள் பொறுப்பு ..!புக்கை பொங்குவோம் என்பதில் நம்பிக்கையோடு நடக்கின்றது தமிழர் படை ..!போராட்ட வடிவம் மாறலாம் போராட்ட இலக்கு மாறது என்ற தலைவரின் சிந்தனை சொல்லும் செய்தி இதுவே தான் என நம்பலாம்.
செய்தி:எதிரி.கொம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.