அண்மையில் அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அபிவிருத்தி குறித்து தெளிவுபடுத்தினார்.
இதன் போது சிங்களத்தில் உரையாற்றி அமைச்சர் 'சங்க்ஸ்குருதிக்க" (கலாசார) 'சன்சாரக" ( சுற்றுலாத்துறை) 'அத்யாபன" (கல்வி) மற்றும் 'கணிகா" என தெரிவித்த போது சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் அனைவரும் சிரித்தனர்.
இதனை அடுத்து அமைச்சருக்கு அருகில் இருந்த செயலாளர் விடயத்தை தெளிவுபடுத்தியதன் பின்னர் சுதாகரித்துக் கொண்டு சமாளித்து உரையாற்ற ஆரம்பித்தார்.
சிங்களத்தில் கணிகா என்பது பாலியல் தொழிலை குறிக்கும்.
'கணக்க" என்ற (கணக்காய்வு) சொல்லுக்கு பதிலாகவே அவர் கணிக்க என்ற சொல்லை பிரயோகித்துள்ளார்.
ஒருவேளை உண்மையை உளறிவிட்டாரோ என ஊடகவியாளர்கள் மத்தியில் கருத்து நிலவியதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.