பக்கங்கள்

08 ஜூன் 2010

எனக்கு தலைவன் பிரபாகரன்,தடைகளுக்கு கவலைப்படமாட்டேன்.



தமிழ்நாட்டில் நுழைய எனக்குத் தடை விதிக்கப்பட்டால் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார்.
நான் தந்தை பெரியாரின் பாசறையச் சேர்ந்தவன். எனக்கு பிரபாகரன் மட்டுமே தலைவன் என்று அவர் தெரிவித்தார்.
இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் தமிழ் நாட்டில் கால் வைக்க டாக்டர் இராமசாமிக்கு அனுமதியளிக்க கூடாது என்று இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சரகத்திற்கு தமிழக அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளது.
கடந்த சில மாதங்களில் தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்து கொண்ட டாக்டர் இராமசாமி விடுதலை புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் அவருக்கு தமிழகத்தில் நுழையத் தடை விதிக்க வேண்டுமென்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று டாக்டர் இராமசாமி கருத்துரைக்கையில் கூறியதாவது:-
கடந்த பெப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும் மே 18 ஆம் திகதி மதுரையில் மடைபெற்ற நாம் தமிழர் மாநாட்டிலும் நான் கலந்துகொண்டேன்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் பொது 40, 000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு திமுக அரசாங்கம் துணைபோயிருக்கின்றது.
இந்தியாவை ஆட்சி புரியும் காங்கிரஸ் உடந்தையாக இருந்திருக்கிறது. திமுகவும் காங்கிரசும் செய்த துரோகத்தை மறைக்க முடியாது. மன்னிக்கவும் முடியாது.
இலங்கையில் தமிழினத்தையே துடைத்தொழிக்கும் கொடூரச் செயலுக்கு கருணாநிதியும் சோனியா காந்தியும் உடந்தையாக இருந்தனர். என் உயிர் இருக்கும் வரை தமிழீழ மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.
இந்த மாதம் 23 ஆம் திகதி தொடக்கி 27 ஆம் திகதி வரை கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் நான் கலந்து கொள்ளமாட்டேன். கடந்த ஜனவரி மாதம் புதுடில்லி பரவாசி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வரும்படி இந்திய அரசாங்கமே எனக்கு அழைப்பு அனுப்பியிருக்கின்றது.
அந்த அழைப்பை நான் முற்றாக புறக்கணித்தவன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மட்டுமே எனக்குத் தலைவர். நான் பெரியார் பாசறையைச் சேர்த்தவன். இவ்வாறு பேராசிரியர் டாக்டர் இராமசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.