பக்கங்கள்

06 ஜூன் 2010

தென்னிந்திய திரைப்பட துறையினருக்கு வன்னி மக்கள் பேரவை நன்றி தெரிவிப்பு!



ஈழத்தமிழ் மக்களின் இழப்பினை புரிந்த தென்னிந்திய திரைப்படதுறையினருக்கு வன்னி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளார்கள்.
வன்னியில் இனப்படுகொலையினை நடத்தி ஓராண்டைக் கடந்துள்ள நாட்களில் வன்னி மக்கள் இழப்பில் இருந்து மீழெளாத நிலையில் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் கூத்து கும்மாளங்கள் நடத்துகின்றது சிறீலங்காஅரசு. வன்னியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டும் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுமுள்ள நிலையில், தமிழ் மக்களின் வாழ்வு நிம்மதி அற்ற வாழ்வாக காணப்படுகின்ற நிலையில், தென்னிலங்கையில் பன்நாட்டு இந்திய திரைப்படவிழா நடைபெறுகின்றது. இதில் தமிழ் மக்களின் உணர்வினை புரிந்துகொண்ட தென்னிந்திய திரைப்படதுறையினர் கலந்து கொள்ளாமையினை நாங்கள் நன்றியுடன் பற்றி நிக்கின்றோம். வன்னியில் தமிழ் மக்கள் தமது வேதனைகளை யாரிடம் சொல்லியழுவது என்று தெரியாத நிலையில் சிங்களப்படையினால் ஏற்படுத்தப்பட்ட படுகொலைகளின் பிரிவுகளின் துயரங்களையும் விழுப்புண்களின் வேதனைகளையும் தாங்கிக்கொண்டிருக்கின்றோம். இன்நிலையில் சிறீலங்கா அரசிற்கும் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கும் கூத்தும் கும்மாளமும் தேவையா? மீள்குடியேற்றம் என்ற பெயரில் நாங்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றோம் என்று சிறீலங்கா அரசு அறிவித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் வதை முகாம் வேதனையினை விட பல மடங்கு துன்பங்களை நமது செந்த மண்ணில் வீட்டு முற்றத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை. எமது வீட்டு கிணற்று நீரினைத்தான் நாங்கள் நிம்மதியாக குடிக்கின்றோம். இன்நிலையில் தாய் தமிழகத்தின் திரையுலக கலைஞர்கள் எமது வேதனைகளை நன்கு புரிந்திருப்பார்கள். இவ்வாறான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதையும் புரிந்த இந்திய திரைக் கலைஞர்கள் கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பன்நாட்டு விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளாமல், வன்னி தமிழ் மக்களுக்காக சிறீலங்கா அரசை புறக்கணித்தமையை பெருமையுடன் பார்க்கின்றோம். வன்னியில் சிறீலங்கா அரசின் படுகொலைகள் நடந்தேறிக்கொண்டிருக்கையில் தமிழகத்தில் உடலினை எரித்து ஈகம் செய்த மறவர்களின் ஈகத்தினை மதிக்கின்றோம். தொடர்ந்தும் தமிழ் மக்களின் விடுதலைப்பயணத்திற்கு தாய் தமிழக உறவுகள் பக்க துணையாக நிற்பார்கள் என்பதையும், இந்த வேளையில் வேண்டி நிற்கின்றோம். சிறீலங்கா அரசின் நிகழ்வுகளை புறக்கணித் இந்த வேளையில் பன்நாடுகளிலும் எமது விடுதலைக்காக தொடர்ந்தும் உழைத்துக்கொண்டிருக்கும் எம்தமிழ் உறவுகளின் கரங்களை இறுக பற்றி நிக்கின்றோம். வன்னி தமிழ் மக்களின் தற்போதைய நிலையினை உணர்ந்து இந்திய திரையுலகம் சிறீலங்காவின் நிகழ்விவை புறக்கணித்தமையினை வன்னி மக்கள் பேரவையினர் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.