வன்னிப் போரில் சிங்களப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை வெளிக்கொணர்ந்த பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சிக்கு அனைத்துலக மன்னிப்புச் சபையால் மனிதவுரிமை விருது வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா வதைமுகாம்களில் அரங்கேறிய கொடூரங்களை வெளிக்கொணர்ந்தமை, போர்க்கைதிகளை சிங்களப் படையினர் நிர்வாணப்படுத்திப் படுகொலை செய்த காணொளிகளை ஒளிபரப்பியமை போன்ற காரணங்களுக்காகவே இந்த விருதை சனல்-4 தொலைக்காட்சிக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை வழங்கியுள்ளது.
சிங்களப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் ஏனைய அனைத்துலக ஊடகங்கள் தயக்கம் காட்டிவரும் நிலையில், கடந்த ஓராண்டு காலப்பகுதியில் மிகவும் துணிச்சலான முறையில் ஆதாரபூர்வமான செய்திகளை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.