இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இந்தியா வரும் ராஜபக்சேவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, பழ.நெடுமாறன், நல்லக்கண்ணு, டி.ராஜேந்தர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழ. நெடுமாறன், ’’இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு வரவேற்பு அளிப்பதோடு, அந் நாட்டுடன் சில உடன்பாடுகளையும் செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழகத்தில் இருந்து ஏற்கெனவே இலங்கைக்கு சென்று வந்த எம்பிக்கள் குழு எதையும் சாதிக்கவில்லை. இந்தக் குழுவினர் ராஜபக்சேவுக்கு சாதகமாக அறிக்கை வெளியிட்டனர்.
இப்போது மற்றொரு குழுவை முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ளார். அந்தக் குழுவாலும் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. எனவே, இலங்கைத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் தொடரும்’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.