யுத்த காலத்தில் குண்டு வைக்கச் சொன்னவர்களுக்கு ஆடம்பர வசதிகளை வழங்கி அவர்களை அமைச்சர் பதவிகளில் இருத்தி விட்டு அவர்களது கட்டளைகளின் படி செயற்பட்டவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சரணடைந்த தமிழ். அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட ஸ்ரீரங்கா அவசர காலச் சட்டம் இவர்களைத் தொடர்ந்து அடைத்து வைப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.
வடக்கு கிழக்கில் ஒரு சட்டமும் தெற்கில் வேறொரு சட்டமும் நடைமுறையில் உள்ளதைச் சுட்டிக் காட்டிய ஸ்ரீரங்கா இது இனங்களுக்கிடையில் மேலும் பிளவுகள் ஏற்படுவதற்கே வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.