பக்கங்கள்

06 ஜூன் 2010

சிங்கள கடற்படையின் அட்டகாசம்!


ராமேசுவரத்தில் இருந்து நேற்று 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றன. அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 4 ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.
மேலும் இலங்கை கடற்படையினர் 50-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் ஒவ்வொரு படகாக ஏறி அதில் இருந்த விலை உயர்ந்த இரால் மற்றும் கனவாய் மீன்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இலங்கை கடற்படையினர் கொள்ளையடித்ததாலும், விரட்டியடித்ததாலும் மீனவர்கள் குறைந்தளவு மீன்களுடன் கரை திரும்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.