பக்கங்கள்

09 ஜூன் 2010

இலங்கை ஏதிலிகள் என நம்பப்படுவோருடன் கப்பலொன்று அவுஸ்திரேலியா நோக்கி செல்கிறது!



இலங்கை அகதிகள் சுமார் 300 பேர் இருக்கலாம் என நம்பப்படும் கப்பல் ஒன்று அவுஸ்திரேலியாவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அகதிகள் புகலிடம் கோரும் நோக்கில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கப்பல் தாய்லாந்து--வியட்நாமிய கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருப்பதாக தெ அவுஸ்திரேலியன் செய்திதாள் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இந்த கப்பலில் புகலிடம் கோருவோரை அழைத்துசெல்பவர்களே முன்னர் கனடாவுக்கு 76 இலங்கையர்களை கனடாவுக்கு பிரிட்டிஸ் கொலம்பியா அழைத்து சென்றவர்களாவர் என சிங்கப்பூரை தளமாகக்கொண்ட பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த ஏற்பாட்டாளர்கள் பிரின்சஸ் ஈஸ்வரி அல்லது ஒசியான் லேடி என்ற கப்பலில் 76 பேரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 'எம் வி சன்சைன்" எனப்படும் இந்த கப்பல் பிலிப்பைன்சின் கடற்கரை பகுதியிலும் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் இது தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை. எனினும் இவ்வாறான நடவடிக்கை ஒன்று குறித்து தமது அரசாங்கம் அறிந்துள்ளதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இவ்வாறான கப்பல் ஒன்றின் வருகை குறித்து தாமும் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள கனடாவின் அதிகாரிகள் தமது கடற்படை இது தொடர்பில் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.