பக்கங்கள்

10 ஜூன் 2010

கண்டாவளையில் எலும்புக்கூடு மீட்பு!


கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து நேற்று புதன்கிழமை மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வீட்டினர் பொலிஸாருக்கு இது குறித்துத் தகவல் வழங்கியதையடுத்து எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வந்த கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பி.சிவகுமார் குறித்த எலும்புக்கூட்டை பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.தாம் 2009 ஆம் ஆண்டு கண்டாவைளயிலிருந்து வட்டக்கச்சிக்கு இடம்பெயர்ந்து சென்றதாகவும் அவ்வேளை தமது தகப்பனார் இரண்டு நாட்கள் கழித்து கண்டாவளையிலுள்ள தமது வீட்டைப் பார்ப்பதற்காகவும் பொருட்களை எடுத்து வருவதற்காகவும் வந்தவர் திரும்பி வரவில்லை என்றும் வீட்டினர் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.எனவே குறிப்பிட்ட எலும்புக்கூடு, அவருடையதாக இருக்கலாம் எனவும் அதனோடிருந்த சாரம் மற்றும் உள்ளாடைகள் தங்கள் தகப்பனாருடையவை தான் என்றும் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட எலும்புக்கூடு ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்பது பற்றி அடையாளம் காண பரிசோதனை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.