யுத்த இடம்பெயர் மக்கள் யாரும் கிடையாது என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர்,200க்கும் குறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளே தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்,விரைவில் இந்த முன்னாள் போராளிகளும் சமூகத்துடன் மீள இணைக்கப்படுவார்கள் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 80 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட கோத்தபாய யுத்த வலயங்களில் 6000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 7000 வீடுகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ளாது நேரடியாக வடக்கிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறும் கோதபாய தெரிவித்துள்ளார்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 செப்டம்பர் 2012
29 செப்டம்பர் 2012
தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்!
ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது.
இலங்கைத் தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழீழம் எனும் நிலைப்பாட்டினை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள் இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் குறித்த இவ்விரு நாடுகளுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அழுத்தத்தினை கொடுத்ததாக தெரியவருகின்றது.
தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கான இறுதித்தீர்வாக அமையுமென்பதனை குறித்த நாடுகளுக்கு உறுதிபடத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு சுதந்திர தமிழீழத்தினை வென்றெடுப்பதற்கான விடுதலைப்பாதையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர்களின் பேராதரவுடன் செல்லுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தனது உத்தியோகபூர்வ அரச அமர்வுகளில் தமிழீழத் தேசியக் கொடியினை வெளிக்கொண்டுள்ளதோடு தமிழர் தாயகத்தில் அன்று நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசின் தொடர்சியாக உருப்பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்க சனநாயக வழிமுறையூடாக சர்வதேச அங்கீகாரத்தினை கோரியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-
-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-
அநாதைகளாக சுடலைக்குள் தள்ளிவிட்டுள்ளனர்!
புதிய நகர்வில் விடுதலைப் புலிகள்: - கொழும்பு நாளேடு
ஜெனிவாவில் நவம்பர் மாதம் முதலாம் நாள் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ள நிலையில், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் புதிய நகர்வு ஒன்றில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைக்கு அமைய, அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் உலகத்தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை மற்றொரு விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழுவும், இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் 31 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு கடிதம் எழுதியதன் பின்னணியிலும் இந்த அமைப்பே இருந்ததாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே, தென்னாபிரிக்கா மற்றும் சுவிற்சர்லாந்து அரசாங்கத் தரப்புகளுடன் உலகத் தமிழர் பேரவை பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 23, 24ம் நாள்களில் இந்தச் சந்திப்புகள், இடம்பெற்றுள்ளன. வண. இமானுவல் அடிகளார் தலைமையிலான, உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு தென்னாபிரிக்க மற்றும் சுவிற்சர்லாந்து அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்த ஆராயப்பட்டதாகவும், போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் தேடுவதற்கு அனைத்துலக போர்க்குற்ற விசாரணையே ஒரே வழி என்று வலியுறுத்தப்பட்டதாகவும் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
28 செப்டம்பர் 2012
கிளிநொச்சி மக்கள் ஐ.நாவுக்கு அவசர மகஜர்!
தமிழ் இனத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் எதிர்பார்ப்புகளான நல்லிணக்கம், பகை மறப்பு, மீளுருவாக்கம், மனித உரிமைகள் காப்பு, அதிகாரப் பகிர்வு என்பவற்றைப் புறந்தள்ளி தேசிய இன மான தமிழ் இனத்தை ஒடுக்குவதற்காக தமிழர்களின் நிலத்தையும் அரசு அபகரித்து வைத்திருக்கிறது.
எனவே ஐ.நாவும் சர்வதேசமும் உடனடியாகச் செயற்பட்டு இந்த நில அபகரிப்பைத் தடுத்து நிறுத்துவதுடன் தமிழ் மக்களின் அமைதியான, சுதந்திரமான, மனித உரிமைகள் தழுவிய வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. செயலர் பான் கீமூனுக்குக் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அவசர மனு ஒன்றை நேற்று வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளனர்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐ.நா தூதரகத்தில் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி விக்ரோரியாவிடம் நேற்று இந்த மனு கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக் காரணமாக சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் உள்ள பரவிப் பாஞ்சான், மருதநகர், கிருஷ்ணபுரம், இரணைதீவு, இயக்கச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இந்த மனுவைக் கையளித்துள்ளனர்.
இந்த மனுவின் பிரதி ஒன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக நில ஆக்கிரமிப்புக்கும் இன ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்த நிலை 2009ஆம் ஆண்டு அரசு புலிகள் இறுதிப் போரின் பின்னர் அதி தீவிரத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலப்பறிப்பும், நில ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட முறையில் அரசால் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு முழுமையும் இந்த நடவடிக்கைகள் அரசால் மிகச் செறிவாக மேற்கொள்ளப்படுகிறது. குடிமக்களுக்குச் சொந்தமாக வாழ்விடங்கள் அபகரிக்கப்படுவதுடன் சொந்தக் காணிகளில் மீளக்குடியேற முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களில் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளின் நிமித்தம் பாதிக்கப்பட்ட மக்கள் 2012.09.27 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய நாம் எமது மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை, கவலைகளை, கண்டனங்களை, மீளக்குடியேறுவதற்கான எமது உரிமையை இந்த மனுவில் ஊடாகத் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.
சரித்திரபூர்வமாகத் தமிழர்கள் வாழ்ந்த நிலங்களும், அவர்களுடைய வளங்களும் அரசாலும், அரச படைகளாலும் பலவந்தமாகப் பறிக்கப்பட்டு வருகிறன. இந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற குடிசன எண்ணிக்கைக்குப் பொருத்தமற்ற விகிதாசாரத்தில் அதிகரித்த இராணுவப் படையணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தகைய படைச் செறிவு அதிகரிப்பு எமது மக்களின் நாளாந்த வாழ்க்கையை அச்சுறுத்துவதாக அமைவதுடன் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீட்டுக்கும் வழிகோலியுள்ளது. தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி என்கின்ற கருத்து நிலைப்பாடுகளுக்கூடாக படைத்துறைப் பரவலாக்கலையும், நில அபகரிப்பையும் அரசு நியாயப்படுத்தி வருகிறது.
தமிழ்ச் சமூகத்தினதும் சர்வதேவ சமூகத்தினதும் எதிர்பார்ப்புகளான நல்லிணக்கம், பகைமறப்பு, மீளுருவாக்கம், மனித உரிமைகள் காப்பு, அதிகாரப் பகிர்வு என்பவற்றைப் புறந்தள்ளியவாறு தேசிய இனம் ஒன்றை ஒடுக்குவதற்கான நவீன தந்திரோபாயங்களுடன் தமிழ் இனத்தையும் அவர்களின் நிலத்தையும் அரசு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்ச் சமூகம் நம்பிக்கையோடு ஏற்றிருக்கின்ற ஜெனீவாத் தீர்மானத்தை மதிப்பதில்லை என்ற அதிகார மமதையோடும் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான அச்சுறுத்தல்களை அதிகரித்தவாறும் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் பேணாநிலை தொடர்ந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாகவே கிளிநொச்சி மாவட்டத்தின் பின்வரும் இடங்களில் எங்களுடைய காணிகளில் மீளக்குடியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீளக்குடியேறுவதற்கு எமக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தும் அதேவேளை தமிழ் மக்களுடைய அமைதியானதும், சுதந்திரமானதும், மனித உரிமைகள் தழுவியதுமான வாழ்வியல் ஒன்றைக் கட்டமைப்பதற்கு சர்வதேச சமூகம் தனது சர்வதேச கடப்பாடுகளை வலுவான முறையில் செயற்படுத்துமாறு வலியுறுத்தி அந்த மனுவைத் தங்களுக்கு முன்னளிக்கின்றோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
27 செப்டம்பர் 2012
காணி சுவீகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
மட்டக்குளியில் பூசகர் ஒருவர் அடித்துக்கொலை!
மோதர - மட்டக்குளி - தொட்டுபொல வீதியில் பூசகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (26) இரவு 8 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக மோதர பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞராவார். இவர் வசித்து வந்த வீட்டில் தனியார் ஆலயம் ஒன்று இயங்கியதாகவும் அதில் குறித்த இளைஞரும் அவரது தந்தையும் பூஜை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் இளைஞரின் வீட்டுக்குள் நுழைந்து கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிள்ளையான் ஆறாயிரத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றதாக கருணா தெரிவிப்பு!
26 செப்டம்பர் 2012
ஐ.நா வரை சென்றது கேப்பாபிலவு!
முஸ்லீம் காங்கிரஸாரின் வீடுகள் மீது குண்டுத்தாக்குதல்!
25 செப்டம்பர் 2012
தமிழ் ஊடகங்களையும் புலம்பெயர் தமிழரையும் சாடுகிறார் பிள்ளையான்!
நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் உணர்ச்சிகரமான பேச்சில் மயங்கி அவர்களுக்கு வாக்களித்துள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்பது போல கிழக்கு மாகாணத்தில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வழங்க அரசியலமைப்பு திட்டத்தில் இடமுண்டா? என ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுழற்சி முறை முதலமைச்சர் திட்டமானது அபிவிருத்தி வேலைகளை பாதிக்கும் என்பதால் அது பொருத்தமானதல்ல எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
நடைபெற்ற கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கிலேயே போட்டியிட்டதாகவும், தனக்கு 15 ஆயிரம் வாக்குகள் இன்னும் மேலதிகமாக கிடைத்து, தமது கட்சி சார்பில் மூவர் வெற்றி பெற்றிருந்தால் நிச்சியமாக தான்தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பேன் எனவும் கூறினார்.
அதன் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்கள் அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை என தான் கவலையடைவதாகவும், இந்த பின்னடைவை ஒரு தற்காகலிக பின்னடைவாகவே பார்ப்பதாகவும், எதிர்காலத்தில் வெற்றிப்பயணத்தை தொடர்வோம் எனவும் பிள்ளையான் நம்பிக்கை வெளியிட்டார்.
குடும்பஸ்தரை ஏமாற்றிய சிறுவர்கள்; மதுவைக் குடித்து உடைமைகளை பறிகொடுத்தார்!
மறைவிடம் ஒன்றில் நின்று மதுபானம் வாங்கித் தருமாறு சிறுவர்கள் கோரிய நிலையில் அவற்றை வாங்கிக் கொடுத்தவர் உடைமைகளை இழந்தார்.
இந்தச் சம்பவம் அண்மையில் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் இடம்பெற்றது. வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவரிடம் மறைவிடம் ஒன்றில் நின்ற சிறுவர்கள் தமக்கு மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர்.
அவர்களிடம் பணம் பெற்று மதுபானம் வாங்கிக் கொடுத்தபோது தம்முடன் குடிக்க வருமாறு சிறுவர்கள் கோரியுள்ளனர். இவர்களின் "அன்புத் தொல்லையை" மீறமுடியாமல் அவர்கள் கொடுத்த மதுவை அருந்திய சில நிமிட நேரத்தில் குறித்த நபர் மயக்கமானார்.
மறுநாள் காலையில் அவ்வழியே சென்ற ஒருவர் அவரைத் தட்டி எழுப்பியபோதுதான் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் ஆகியவை திருடப்பட்டமை தெரியவந்தது.
மதுவின் தாக்கத்தால் பல மணிநேரம் கண்விழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சாவகச்சேரி வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டது.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பெண்கள்,சிறுவர்கள் கண்ணீர்!
24 செப்டம்பர் 2012
இலங்கை சிறையில் தமிழக மீனவர் மரணம்!
இலங்கை சிறையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களில் ஒருவரான தங்கராஜ் உயிரிழந்துள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் ஓராண்டுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய இந்திய தூதரகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இவர்கள் மீதான வழக்கு விசாரணையின் போது இலங்கை போலீசார் வாய்தா வாங்கிக் கொண்டே வந்தனர்.
இந்த நிலையில் இன்று முற்பகல் திடீரென ஐந்து மீனவர்களில் ஒருவரான தங்கராஜ் என்பவர் உயிரிழந்திருப்பதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். மீனவர் தங்கராஜின் மரணம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழருக்கு விரோதமான நிபந்தனைகளை விதித்தது முஸ்லிம் காங்கிரஸ்? – போட்டுடைத்தார் ஹசன் அலி
மனிக்பாமுக்கு மூடுவிழா; கேப்பாபுலவு மக்கள் நிர்க்கதிக்குள்!
வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்துக்கு மூடுவிழா செய்வதற்காக அங்கு தங்கியிருந்த கேப்பாப்புலவு மக்களை நிர்ப்பந்தித்து அரசு வெளியேற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்புலவுப் பகுதியில் இன்னமும் படைத்தளங்கள் விலக்கப்படாததோடு, கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையும் பூர்த்தியாகாத நிலையிலேயே அந்தப் பகுதி மக்களை முகாமில் இருந்து வெளியேற்றி வேறு இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
"இலங்கையில் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு அவற்றில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர் என்று சர்வதேசத்துக்கு காட்டுவதற்காகவே இவ்வாறு நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றோம்'' என்று பாதிக்கப்பட்ட மக்கள் நேற்றிரவு "உதய'னுக்குத் தெரிவித்தனர்.
ஜெனிவாவில் நடை பெற்றுவரும் மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கையில் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளில் ஒன்றாக மீள்குடியமர்வு முற்றுப்பெற்று விட்டது. என்று காட்டுவதற்காகவும் இந்தப் பலவந்த வெளியேற்றம் நடைபெறுவதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள கேப்பாப்புலவைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் தமது சொந்த ஊரில் மீள்குடியமர அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர்களை சீனியாமோட்டை என்ற இடத்தில் தற்காலிகமாக குடியமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களை சொந்த இடத்தில் குடியேற்றுமாறு மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நலன்புரி நிலையத்துக்கு வந்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று, முகாமில் இருந்து மக்கள் அனைவரும் கட்டாயம் வெளியேற வேண்டும் எனவும் 25ஆம் திகதி முதல் முகாம் மூடப்படவுள்ளதால் அதற்குப் பின்னர் முகாமில் தங்கியுள்ளோருக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்பட மாட்டாது எனவும் கண்டிப்பான தொனியில் அறிவுறுத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருமாதங்களின் பின்னர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது மக்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் வேறு வழியின்றி நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் குடியேறுவதற்காக நேற்று இரவிரவாகப் பொருள்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பொருள்களை ஏற்றுவதற்கான வாகன வசதிகளைக் கூட அரசு பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தமது சொந்தச் செலவிலேயே வாகனங்களை வாடகைக்கு அமர்த்திப் பொருள்களை பொதுமக்கள் ஏற்றினர்.
"நாங்கள் எங்களுடைய சொந்த நிலத்தில் மீள்குடியமர்த்துமாறு பலமுறை போராடியும் பார்த்துவிட்டோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. முகாமில் இப்போது எஞ்சியிருப்பவர்களில் நிறையப்பேர் ஆண் துணை இல்லாதவர்கள். இதைப் பயன்படுத்தி இப்போது முகாம் பகுதியில் திருட்டுகளும் அதிகரித்துவிட்டன. இனி முகாமில் தங்கியிருந்தால் எந்தவித உதவியும் கிடைக்காது. பட்டினியால் நாங்கள் சாக வேண்டியதுதான். எனவேதான் வேறுவழியின்றித் தற்காலிக இடத்திலாவது தங்கியிருக்க முடிவெடுத்துள்ளோம்.'' என்று முகாம் வாசி ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.
மீள்குடியமர்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கண்ணிவெடி அகற்றல் பூர்த்தியாவில்லை என்று கூறி நிர்க்கதியாக விடப்பட்ட மந்துவில், மல்லிகைத்தீவு மக்களைப்போலத் தாமும் நிர்க்கதிக்கு உள்ளாக வேண்டி வருமோ என்று கேப்பாபுலவு மக்களும் அச்சம் தெரிவித்தனர்.
நலன்புரி நிலையங்கள் மூடப்படவுள்ளதால் அங்கு பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி, கேபிள் அன்ரனா, தொலைத்தொடர்பு சாதனங்கள், தளபாடங்கள் என்பவற்றைத் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக அரச அதிகாரிகள் எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை கேப்பாபுலவு மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக அறிக்கை ஒன்றை உடன் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பணிப்புரைக்கு அமைவாகவே அந்தப் பகுதியைச் சேர்ந்த 314 குடும்பங்களையும் வேறு இடங்களிலாவது மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் இருமாதங்களுக்குள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 361 குடும்பங்களே முகாமில் தங்கியுள்ளதாக அரச தரப்புக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 செப்டம்பர் 2012
தீவகத்தில் கரையொதுங்கும் சடலங்கள்!
யாழில் முதலீட்டை மேற்கொள்வதற்கு மதுரை வர்த்தர்களுக்கு அழைப்பு.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்பாணத்தில் தொழில் ஆரம்பிப்பதற்கு மதுரை வர்த்தர்களுக்கு, யாழ் வர்த்தகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க உறுப்பினர்கள், முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன் தலைமையில், கொழும்பு சென்றனர். அங்கு, சிலோன் வர்த்தக சங்க பிரதிநிதிகளை சந்தித்தனர்.
வர்த்தக வளர்ச்சி, தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் வேளாண்மை உற்பத்திப் பொருட்களின், தொழில் வணிக மேம்பாட்டுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.
காய்கறி, பழங்களை, பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, பேக்கிங் செய்யும் தொழிற்சாலைகளை மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் துவக்கவும், கொழும்புவில் ஹோட்டல் கட்டுவதற்கு தயாராக உள்ளதாகவும் தமிழக வர்த்தக குழுவினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரன் பேசுகையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் யாழ்பாணத்தில் தொழில் வணிக வளர்ச்சி, வேலைவாய்ப்பு இல்லை.
அங்கு தொழில் துவங்க வேண்டும். தற்போது, பெரும்பாலான பொருட்கள் கொழும்பு நகரில் இறக்குமதியாகிறது. அங்கிருந்தே யாழ்பாணம் அனுப்பப்படுவதால், அவற்றின் விலை அதிகமாகிறது. பொருட்களை நேரடியாக யாழ்பாணத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்,´´ என்றார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மதுரை வர்த்தகர்கள் உறுதியளித்தனர்.
ஐநா மனித உரிமை பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடருக்கு 32 ரகசிய அறிக்கைகள்!
எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடருக்கு 32 அரச சார்பற்ற நிறுவனங்கள் ரகசிய அறிக்கைகளை அனுப்பி உள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது.
இந்த நிறுவனங்களில் பல வன்னியில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையை நிறுத்த கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்ததுடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாக உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு அறிக்கைகளை அனுப்பிய அரசசார்பற்ற நிறுவனங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் இந்தோனேசியாவை இரண்டாக பிளவுப்படுத்த முயற்சிக்கும் மாநாடு ஒன்றுக்கு சென்று அந்த நாட்டினால் வெளியேற்றப்பட்டவர் என தெரியவந்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளார்.
22 செப்டம்பர் 2012
மக்களை ஏமாற்றிவிட்டதால் ஊர் திரும்ப அஞ்சும் மு.காவினர்!
நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் காரியாலயத்தில் உயரதிகாரிகளுடன் சந்திப்பு.
1.பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3.இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4.பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இச் சந்திப்பில் தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக தொடர்ந்து மக்கள் மையப்படுத்தப்பட்ட வெகுயன கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தவேண்டும் மற்றும் மனிதவுரிமை அமர்வுகள் நடைபெறும் காலங்களில் மக்கள் பலத்துடன் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில் அனைத்துலக குமூகத்தை நோக்கி நீதிக்கான நிகழ்வுகளை நடாத்துவது வரவேற்கத்தக்கது எனவும் கூறப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற உரையாடலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசால் இனவழிப்பில் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்கள் தாயகத்தில் எதிர்கொள்ளும் இன்றைய நிலைமையை விரிவாக எடுத்துக் கூறப்பட்டது . முக்கியமாக சிங்கள அரசு இன்று பாரம்பரிய தமிழர் நிலத்தை அபகரிப்பதை மற்றும் சிங்கள மயமாக்கல் , தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ச்சியாக மேற்கொள்ளுவதை சுட்டிக்காட்டி பேசப்பட்டது .
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்."
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
078 662 93 06
076 410 06 76
076 421 13 99
21 செப்டம்பர் 2012
பணத்திற்கு “கலாநிதி“ பட்டம்! யாழ்.பல்கலைக்கழகத்தில் பெறலாம்?!
தமிழ் இனத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கொண்டுவரப்பட்டிருக்கின்ற போதிலும் தமிழினத்தினைப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் அந் நடவடிக்கைளுக்கு துணை நிற்கும் தமிழினத்தின் சில சக்திகளும் ஒத்துழைக்கின்ற செயற்பாடுகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. நில ஆக்கிரமிப்பு அத்துமீறிய குடியேற்றம் எனத் தொடரும் நடவடிக்கையின் தொடராக தமிழ் மக்களின் கல்வியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தலைதூக்கியிருக்கின்றன.
தமிழ் மக்களின் அடையாளமாக குறிப்பாக கல்வியிலும் அறிவார்ந்தவர்கள் பலரதுதோற்றுவாயாகக் கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்தில் பணத்திற்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்குகின்ற நடவடிக்கை தொடர்பிலான திடுக்கிடும் தகவல்கள் தமிழ்லீடருக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான நவீன பல்பொருள் விற்பனை நிலையம் மற்றும் திருமண மண்டம் ஒன்றினை நடாத்திவருகின்ற தியாகி எனப்படும் தியாகேந்திரன் என்பவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஈபிடியின் கல்வி அபிவிருத்திக்குழு ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது.
இந்த நடவடிக்கையில் ஈபிடிபியின் கல்வி அபிவிருத்திக் குழு முக்கியஸ்தரும் நல்லூர் கோட்டக்கல்வி அதிகாரியுமான மாணிக்கராசா மற்றும் தனியார் கல்வி நிலைய ஆசிரியரான இரா.செல்வவடிவேல் மற்றும் ஆங்கில ஆசிரியர் சுதர்சன் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றனர். குறித்த நபர்கள் பாடசாலை அதிபர்கள் கல்வி சார் அதிகாரிகளிடம் மாதிரிப் படிவம் ஒன்றைக் கையளித்து அதில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று தியாகேஸ்வரனுக்கு கலாநிதிப்பட்டத்தினை யாழ்.பல்கலைக்கழகம் வழங்கவேண்டும் எனத் தெரிவித்து அவர்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த வலியுறுத்தலுக்கு அமைய யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம் மற்றும் பாடசாலை அதிபர்கள் கோரிக்கைக் கடிதங்களை அனுப்பிவைத்திருப்பதாகத் தெரியவருகின்றது. பணத்திற்காக ஈபிடிபி இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமையும் பொருத்தமற்ற நபர்களுக்கு மதிப்பிற்குரிய பட்டங்களை வழங்குவதன் மூலம் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட யாழ்.பல்கலைக்கழகம் தனது தனித்துவத்தினை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டிருப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் சிலர் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளின் அதிபர்களை மாற்றி அதன் ஊடாக சீரான கட்டமைப்புக்களை உடைய பாடசாலைகளைச் சிதைப்பதற்கான முயற்சியிலும் வல்லாதிக்க சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. இதற்கு பிரதானசூத்திரதாரிகளாக ஈபிடிபியினர் ஈடுபட்டிருகின்றனர். அந்த வகைக்குள் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்.இந்து மகளிர் கல்லூரி, யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி உட்பட்ட உயர் கல்லூரிகளின் அதிபர்களை உரிய காரணங்கள் எதுவும் இன்றி இடமாற்றத்திற்கு உட்படுத்தி கல்லூரிகளின் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டிருகின்றன.
அதிபர்கள் பதவிகளில் இருந்து விலக்கப்படுகின்ற போது பாடசாலைக் கட்டமைப்புக்களில் பிறழ்வு நிலை ஏற்பட்டிருக்கின்றது. யாழ். இந்து மகளிர் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கு நல்லூர் கோட்டக்கல்வி அதிகாரியாகவும் ஈபிடிபியின் கல்வி அபிவிருத்திக் குழுவின் முக்கியஸ்தராக விளங்கிவருகின்ற மாணிக்கராசா என்பவரே காரணமாக இருந்தார் என்பது பகிரங்கப்பட்டிருந்தது. ஒரே வளாகத்தில் கல்வி அலுவலகமும் கல்லூரியும் செயற்பட்டுவந்திருந்தன. கல்லூரிக்குச் செல்கின்ற மாணவிகளை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்தமையை மாணவிகள் அதிபரிடம் முறையிட்டிருந்தனர். இதுதொடர்பாக அதிபர் தெரிவித்த எதிர்ப்பினை அடுத்து அதிபர் பழிவாங்கப்பட்டதுடன் அதிபருக்கு ஆதரவு தெரிவித்த மாணவிகளை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீ நேரடியாக அழைத்து மிரட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரான மாணிக்கராசா தான் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் பதவியினைக் கைப்பற்றுவதற்காக அங்கிருந்த அதிபரின் பதவியினைப் பறித்தெடுத்ததாக தெரியவந்திருக்கின்றது. இதேபோல வேம்படி மகளிர் கல்லூரியிலும் அரசியல் தலையீட்டினை மேற்கொண்டு அங்கிருந்த நிர்வாகச் செயற்பாடு சிதைக்கப்பட்டிருக்கின்றது. இதனை விடவும் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவிலும் முற்றுமுழுதான அரசியல் தலையீடு இடம்பெற்றிருந்தமை பரமரகசியமாகும். இவ்வாறான அரசியல் அசிங்கங்களை அரங்கேற்றுவதற்காக கல்விச் சமூகத்தின் உயர் பீடங்களை கையிலெடுத்திருக்கின்ற ஈபிடிபி யாழ்ப்பாணத்தில் இடம்பெறப்போகும் மற்றொரு பயங்கரத்தினை கண்டு கொள்ளவில்லையா? அல்லது கண்டும் காணாமல் துணை நிற்கிறதா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அதிகாரங்கள் இன்னும் சில வருடங்களில் சிங்கள மாணவர்களின் கைகளுக்கு மாறும் அபாய நிலை ஏற்பட்டிருக்கின்றமையே அந்தப் பயங்கரமாகும். அடுத்த ஆண்டு யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயில்வதற்காக யாழ்ப்பாணம் வருகின்ற சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அறுபதைவிட அதிகம் என்று தெரியவந்திருக்கின்றது. இதன் தொடராக அடுத்த அடுத்த ஆண்டுகளில் சிங்கள மாணவர்களின் யாழ்.பல்கலைக்கழகத்திற்கான அனுமதி எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என்றும் சிங்கள மாணவர்களின் அதிகரிப்பின் மூலம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பெரும்பான்மை சிங்களமயமாகின்றபோது தமிழ் மக்களின் வலுவான சக்தியாக விளங்குகின்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் சக்தியும் சிதறுண்டு போகும் அபாய நிலையும் உணரப்பட்டிருக்கின்றது.
சிங்கள இனவாதம் திட்டமிட்ட வைகையில் மிக நேர்த்தியாகவும் சாமர்த்தியமாகவும் தமிழினத்தின் மீதான ஆழமான சிதைப்பினைமேற்கொண்டுவருகின்றது. பதவிக்காகவும் பணத்திற்காகவும் தம்மை விலை கொடுத்திருக்கின்ற கல்வித்துறையில் உயர் பதவிகளில் உள்ளோரும் அரசியலில் உள்ளோரும் சில நாள் கனவுகளுக்காக ஒட்டுமொத்த தமிழினத்தையும் விலைபேசும் நிலையினை என்று கைவிடுவோர்களோ அன்று தான் தமிழினத்திற்கான உண்மையான விடுதலை கிடைக்கும் இதுவே உண்மை.
-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்
நன்றி:தமிழ் லீடர்
-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்
நன்றி:தமிழ் லீடர்
சகல அபிவிருத்தித் திட்டங்களிலும் ஊழல் மோசடிகள்!
20 செப்டம்பர் 2012
விஜயராஜ் எந்த அமைப்பு? :முரண்பட்ட சில தமிழ் அமைப்புகள்!
தமிழர்களை திருப்பி அனுப்புகிறது பிரித்தானியா!
பிரித்தானியாவின் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் வாடகைக்கு அமர்த்தப்படும் மூன்று விமானங்களில் இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். முதலாவது குழுவில் 60 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். விமான நிலையங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்பதால், எந்த விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்த நிலையில், பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இலங்கையில் நடைபெற்ற போர் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவில் அகதிகளாக வாழ வேண்டிய தேவையில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் தமிழர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் விசா பிரிவின் அதிகாரி சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
இதனை கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுரகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறி, பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோரின் நோக்கம் பணம் சம்பாதிப்பதே எனவும் குலரத்ன குறிப்பிட்டுள்ளார்.
19 செப்டம்பர் 2012
குரானை புறந்தள்ளி மஹிந்த சிந்தனையின் கீழ் செயற்படுகிறது முஸ்லிம் காங்கிரஸ்!
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருக்குரானை ஒருபக்கம் வைத்து விட்டு மஹிந்த சிந்தனையின் கீழ் செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியிக் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் அரசிற்கு எதிரானவர்கள் என காண்பித்து மக்களிடம் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எதிர்க் கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர், நான் முன்னதாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அரசிலிருந்து விலகி வேறாக போகாது என குறிப்பிட்டேன். அதே போல் நடந்து விட்டது.
அரசுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு தேர்தலில் தனித்து போட்டியிட்டது. பின்னர் நடந்தது அனைத்துமே நாடகம். இங்கு முஸ்லிம் காங்கிரஸ் செய்தது என்ன? மக்களை இந்தப் பக்கம் ஏமாற்றி விட்டு சலுகைகளை அனுபவித்தல்.
இங்கு முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு விடயங்கள் முன்னின்றன. ஒன்று பள்ளி உடைத்தல். மற்றையது அமைச்சு பதவியை பாதுகாத்தல். இதில் இரண்டாவது தெரிவையே முஸ்லிம் காங்கிரஸ் தெரிவு செய்துள்ளது. இதிலிருந்து ஒருவிடயம் தெரிந்து கொள்ள வேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஒருபோதும் அரசிற்கு எதிராக செல்லாது எனவும் ரணில் மேலும் தெரிவித்தார்.
18 செப்டம்பர் 2012
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை",ஐ.நாவிடம் முறைப்பாடு.
சலுகைகளுக்காக மு.கா.அரசிடம் சோரம்போகக்கூடாது",-அஷாத் சாலி
17 செப்டம்பர் 2012
முஸ்லிம் காங்கிரஸ் இறுதி முடிவெடுக்கவில்லை.
வேலணையில் உருக்குலைந்த நிலையில் சடலம்!
வேலணைப் பகுதி கடற்கரையில் இனம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்குச்சென்ற மக்கள் சடலத்தைக்கண்டு ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலத்தை இனம் காண்பதற்காக வைத்துள்ளார்கள். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் குறிப்பிட்ட சடலம் கடல் தொழிலுக்குச்சென்றவர்களுடையதா அன்றி வேறெங்காவது கடலில் வீந்தவர்களுடையதா என்பது தெரியாத நிலையில் சடலம் உருக்குலைந்து காணப்படுகின்றது.
ஊர்காவற்துறை பொலிஸாருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 செப்டம்பர் 2012
முதலில் தனது மகனை விசாரணைக்கு ஒப்படைக்கட்டும் மேர்வின் சில்வா.
![]() |
மாலக சில்வா |
15 செப்டம்பர் 2012
300 பேரை திருப்பி அனுப்புகிறது பிரிட்டன்!
பிரிட்டனில் இருந்து தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைத் தளமாகக் கொண்டியங்கும் "த இன்டி பென்ரன்' நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் சித்திர வதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் இவர்களை பிரிட்டன் குடிவரவு முகவர் நிலையம் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக பெருந்தொகையினர் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 50 தமிழர்களை திருப்பி அனுப்ப பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதும் அந்த நாட்டு நீதி மன்றம் தலையிட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் ஆபத்து இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
கடந்த வருடத்தில் இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் மீளவும் பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் திருப்பி அனுப்பப்பட்ட போது தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோம் என்பதற்கு போதிய ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்தனர் என பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள 300 பேரில் பெருமளவானோர் மாணவர்கள் எனவும் விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளன. திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கையில் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்டுத்தும் சாத்தியம் உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ் கைதிகளை நடத்தும் விதத்தை வைத்தே இந்த அரசின் இனத்துவேசத்தை புரிந்து கொள்ளலாம்.
படுகொலைகளைச் செய்தவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிகிச்சையளிக்கும் இந்த அரசாங்கம் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உரிய முறையில் கவனித்து சிகிச்சையளிக்க நடவடிக்கை ௭டுக்காமையானது இனத்துவேசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் காலியிலும் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி சதீஸ் குணமடையாத நிலையில் மீண்டும் மகசின் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதியான சதீஸ் உடல் நிலையில் ௭வ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் திடீரென மீண்டும் மெகசின் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை சதீஸின் மனைவிக்கோ பெற் றோ ரு க்கோ தெரிவிக்காமலேயே மேற்கொள் ளப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னரே அது தொடர்பில் சதீஸின் மனைவிக்கும் பெற்றோருக்கும் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
௭னவே இது முறையற்றதொரு செயலாகும். மகசின் சிறைச்சாலையிலுள்ள வைத்தியசாலை, சதீஸிற்கு சிகிச்சையளிப்பதற்கு உகந்த இடமல்ல. ஏற்கனவே இரு தமிழ் அரசியல் கைதிகள் முறையாக சிகிச்சையளிக்காமையினால் ஏற்பட்ட அசம்பாவிதம் இவருக்கும் நடந்துவிடக்கூடாது. இந்த விடயமானது மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சினையாகும். ௭னவே அரசியல் கைதியான சதீஸை தற்போதைய நிலையிலிருந்து பாதுகாக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.
கொலை குற்றவாளிகள் இன்று சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை மாத்திரம் உரிய முறையில் சிகிச்சையளித்து பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை ௭டுக்காதுள்ளது. ௭னவே, இந்த அரசாங்கத்தின் இனத்துவேசத்தை ௭மக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகின்றது.
தற்போது கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலையில் இருக்கும் சதீஸை மனைவி மற்றும் பெற்றோரின் கண்காணிப்பில் சிகிச்சை பெறுவதற்காக குறைந்த பட்சம் பிணையிலாவது விடுவிக்க வேண் டும். இவ்வாறு விடுவிக்கப்பட்டால் அவரை தற்போதைய நிலையிலிருந்து பாதுகாக்கலாம். அதற்கான உதவிகளை செய்ய அவரின் உறவினர்களும் சிவில் சமூகத்தினரும் தயாராக இருக்கின்றார்கள் ௭னவும் அவர் தெரி வித்தார்.
14 செப்டம்பர் 2012
கைவிடப்பட்டது கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை!
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவிருந்த குறித்த பேச்சுவார்த்தை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம், அலரி மாளிகையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ள காரணத்தினால் சமூகமளிக்க மாட்டார் என்பதால் கைவிடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளளார்.
குறித்த கலந்துரையாடல் மீண்டும் இடம்பெறும் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெறவிருந்த இந்தப் பேச்சுவார்தையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு ஆதரவைக் கோருவதுடன், முதலமைச்சர் பதவி உட்பட மேலும் பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வது குறித்தும் பேசப்படவிருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
அண்ணர் சொன்னதை வெளியில் செயல்படுத்துங்கள்!
![]() |
பாலா அண்ணாவுடன் நடேசன் அவர்கள் |
13 செப்டம்பர் 2012
கிழக்கின் முதலமைச்சராக மீண்டும் பிள்ளையான்?

புலம்பெயர் மக்களிடம் பிழைப்பு நடத்தவே உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரினாராம்!

கொள்கைகளற்ற மகிந்த அரசில் கொள்ளைகளுக்கே முதலிடம்"விக்கிரமபாகு கருணாரட்ன.
வாக்குகளைக் கொள்ளையடித்தே மஹிந்த அரசு தேர்தல் வெற்றியை ருசித்துள்ளது என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நவசமசமாஜக் கட்சி, மஹிந்த சிந்தனையில் "கொள்கை'க்கல்ல,"கொள்ளை'க்கே முதலிடம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் ஆணை தமக்கே உள்ளது என மார்தட்டும் இந்த அரசு, வன்முறைப்பாதையில் பயணிப்பதேன் என்றும் அந்தக் கட்சி கேள்வி யெழுப்பியுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
தற்போது ஆட்சிபீடத்திலுள்ள அரசு என்றுமே நீதியான முறையில் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.மாறாக,அது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டே ஜனநாயகத்துக்கு எதிரான வகையில் அரச வளங்களைப் பயன்படுத்தி தேர்தலை எதிர்கொள்கின்றது.
இவ்வாறு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களை உருட்டி மிரட்டி வாக்குகளைப் பெறுவது உண்மையான வெற்றியல்ல. வாக்குகளைக் கொள்ளையடித்துவிட்டு மக்கள் ஆணை தமக்கே கிடைத்துள்ளது என அரசு கூறுவது மடத்தனமாகும்.
அதேவேளை, பணத்தை மாத்திரமல்ல, இந்த அரசு தற்போது உறுப்பினர்களையும் கொள்ளையடிக்கின்றது. மு.கா. உறுப்பினர்களுக்கு வலைவீசியுள்ளமை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
மஹிந்த சிந்தனையை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டர். ஏனெனில், அதில் கொள்கை, கோட்பாடுகளுக்கு இடமில்லை. கொள்ளைகளுக்கே முதலிடம் உள்ளது. கடந்த தேர்தல்களில் பெற்ற பெறுபேறுகளை விட, இந்தமுறை அரசுக்கு வாக்கு வங்கியில் பெருவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.
யாழ்ப்பாணத்தில் பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகள்.
12 செப்டம்பர் 2012
ஆனந்தபுரத்தில் பெருமளவான மனித எச்சங்கள்!
அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் மனித எலும்புக் கூடுகளும் எரியுண்ட நிலையில் மனித எச்சங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் பகுதியின் பல இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன.
இந்தப் பகுதியில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்கள் இதனை உறுதிப்படுத்தினர் அத்துடன் பல இடங்களில் எரியூட்டப்பட்ட நிலையிலும் எலும்புகள், மனித எச்சங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனந்தபுரம் தமிழ் வித்தியாலத்தின் சகல கட்டடங்களும் அழித்து கற்குவியல்களாக காணப்படுகின்றன. அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்படுகின்றன. அத்துடன் பாடசாலை கட்டடத்தின் இரு இடங்களில் சிதைந்தும் உருக்குலைந்தும் காணப்பட்ட சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் உள்ள காணியொன்றில் குடும்பம் ஒன்று மீளக் குடியேறச்சென்ற போது எரியூட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் குவியலாக காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கூடுதலான பகுதிகளில் கட்டட இடிபாடுகளுக்குள்ளும், பதுங்குழிகளுக்குள்ளும் புதையுண்ட நிலையில் சடலங்களும் எச்சங்களும் காணப்படுவதாக அங்கு மீளக் குடியமர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக மனித எச்சங்கள் காணப்படுவதால் மீளக் குடியமர்ந்துள்ள மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு லஞ்சம் வழங்க முயற்சி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கே இவ்வாறு லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபிற்கு ஆதரவளித்தால் பணம் வழங்குவதாக பேரம் பேசப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய நான்கு உறுப்பினர்களை இவ்வாறு விலைக்கு வாங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
11 செப்டம்பர் 2012
உலகத் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் உன்னி கிருஷ்ணன்.
தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
யாருக்கு ஆதரவென்பதை தீர்மானிக்கும் மு.கா.வின் விசேட கூட்டம் இன்று.
10 செப்டம்பர் 2012
வேலணையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் - ஒன்று பெண்ணுடையது மற்றையது ஆணுடையது!
வேலணை வைரவர் கோயிலடிப் பகுதியில் நேற்றையதினம் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டன. கயிற்றால் கல்லுடன் கட்டப்பட்டு, கிணற்றுக்குள் வீசி படுகொலை செய்யப்பட்டவர்களுடைய எச்சங்களாக இவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த கோயிலடிப் பகுதியிலுள்ள கிணற்றினை துப்பரவு செய்ய முயன்ற சமயம் மேற்படி மண்டையோடு ஒன்று இருப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர். இதுகுறித்து கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இதன் பின்னர் நேற்று மதியம் குறித்த கிணற்றிலிருந்து மண்டை ஓட்டை மீட்க முயன்ற சமயம் இன்னொரு மண்டையோடும் மனித எச்சங்களும் கிணற்றுக்குள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் இரண்டு மனித மண்டையோடுகளும் ஏனைய எலும்புத் துண்டங்களும் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. ஒரு மண்டையோடு ஆணுடையது என்றும் மற்றையது பெண்ணுடையது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு மனித எச்சங்களும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலப் பகுதியிலேயே கிணற்றினுள் போடப்பட்டிருக்க வேண்டும் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் மனித எச்சங்களாக மீட்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படும் தொப்பி மற்றும் ஆடைகளும் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட மண்டையோடுகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
09 செப்டம்பர் 2012
யாழில் ரவுடிகள் அட்டகாசம் - 2 பிள்ளைகளின் தந்தை வெட்டிக் கொலை!
யாழ் - திருநெல்வேலி சிவன் - அம்மன் ஆலயத்தை அண்டிய மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இரு இளைஞர் குழுக்கள் பரஸ்பரம் வாளால் வெட்டிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சினிமாப் பாணியில் வாள்களுடன் வீதிக்கு வந்த இளைஞர்கள் பரஸ்பரம் வாளால் வெட்டுப்பட்டுள்ளனர். இதில் யாழ். திருநெல்வேலிப் பகுதியினைச் சேர்ந்த பிரபு (வயது25) என்று அழைக்கப்படும் 2 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தைச் சேர்ந்த தம்பா மற்றும் நல்லூரைச் சேர்ந்த றூபன் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதேவேளை குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரை சிலர் துரத்தி வந்தாகவும் பின்னர் அந்த இடத்தில் வைத்து வெட்டி வீழ்த்தி விட்டு தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னதாக அந்தப் பகுதியில் இளைஞர்கள் சிலர் தமக்குள் மோதிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் காயமடைந்தவர்களில் ஒருவர், அவர்களிடையே சண்டையை நிறுத்துமாறு கூறச் சென்றவராவார்.
இதேவேளை இந்தச் சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நல்லூர் அரசடி பகுதியில் நுழைந்த இளைஞர்கள் சிலரை வெட்டியுள்ளனர். இதில் சிலர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வெளியாட்கள் உள்நுழைய முடியாதபடி அப்பகுதியில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அப்பகுதி முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக பரவலாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டிய பொலிஸார் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கப்பலேந்தி மாதா ஆலயத்தாக்குதல் சம்பவத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்.
மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயப்பகுதிக்கு வந்த காடையர் குழுவொன்று குறித்த ஆலயத்தினுள் கற்களால் வீசி தாக்குதல்களை நடத்தியதோடு,பட்டாசுகளை கொளுத்தி குறித்த ஆராதனையினைக் குழப்ப முயற்சி செய்தமை மத அனுஸ்டானங்களையும்,இன ஒற்றுமையையும் சீர் குலைக்கும் செயலாகக் காணப்படுவதாகவும் இச்சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் தென் பகுதியில் முஸ்ஸிம்களின் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும்,பல்வேறுபட்ட தமிழ் அமைப்புக்களும் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு நாட்டில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழுகின்ற இடங்களில் தமது வழிபாட்டுத்தலங்களை அமைத்து வழிபட முடியும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அண்மைக்காலங்களாக மன்னார் கருசல் கிராமத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது அப்பகுதிக்கு வரும் காடையர்கள் மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்று விடுகின்றனர்.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதி கத்தோலிக்க மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு வந்தன.
இந்த நிலையில் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேஸ்பர் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த காடையர் குழு ஒன்று குறித்த ஆலயத்தை நோக்கி கற்களினால் எறிந்து விட்டு பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளனர்.
கல் வீச்சில் திருப்பலியினை ஒப்புக்கொடுத்த அருட்தந்தை ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் வெளியில் சென்று பார்க்கச் சென்ற 2 இளைஞர்கள் அக் காடையர்களினால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர்.
இதனால் அன்றைய தினம் இடம் பெற்ற வேஸ்பர் ஆராதனை குழப்பமடைந்த நிலையிலே காணப்பட்டது.
இப்பகுதியில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் காடையர் குழு மேற்கொண்ட குறித்த நடவடிக்கையினால் அக்கிராமத்தில் பாரியதோர் இனக்கலவரத்தைத் தோற்றுவிக்கும் செயலாகவே இந்தச்சம்பவம் அமைந்துள்ளது.
எனவே தொடர்ந்தும் இத்தகையதொர்ய் சம்பவம் இடம் பெறாது இருக்க சம்பவத்துடன் ஈடுபட்ட குறித்த குழுவினர் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும்,தமிழ்,முஸ்ஸிம் மக்களின் ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் எனவும்,இச்சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)