பக்கங்கள்

11 மே 2010

பருத்தித்துறையில் இளம் யுவதி கடத்தல் முயற்சி முறியடிப்பு!



யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரிக்கு பின்னால் உள்ள கார்த்திகேயர் வீதியில் வைத்து இன்று யுவதி ஒருவரை கடத்திச்செல்ல எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை 4.30க்கு இடம்பெற்றுள்ளது.
18 வயதான அனுசியா என்ற யுவதி உறவினர் வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருக்கையில் வெள்ளைவானில் வந்தவர்கள், அவரை வானுக்குள் இழுத்து ஏற்ற முற்பட்டனர். பின்னர் அவரின் வாயில் ஏதோ மருந்துகளை ஊற்றவும் முயற்சித்துள்ளனர்.
எனினும் குறித்த யுவதி அவற்றை சமயோசிதமாக சமாளித்து கூச்சலிடவே, அயலவர்கள் உதவிக்கு வர வானில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த யுவதி தற்போது மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.