நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
09 மே 2010
சிவிலில் வந்த படையினர் இளைஞன் மீது தாக்குதல்.
மன்னார் பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பு நின்று கொண்டிருந்த இளைஞன் மீது சிவிலில் வந்த காவற் படையினர் மூவர் இன்று இரவு 8.30 மணியளவில் கண்மூடிதனமாக தாக்கியுள்ளனர். மேற்படி 25 வயதுடைய இளைஞன் உணவகத்தில் உணவு அருந்தி விட்டு வெளியில் வந்து நின்று கொண்டிருந்த போது வாகனம் ஒன்றில் சிவிலில் வந்த படையினர் மூவருக்கும் இளைஞனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படையினரில் ஒருவர் தன்னிடம் இருந்த கண்ணாடி போத்தல் ஒன்றினால் இளைஞனின் முகத்தில் தாக்கியுள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில் பதற்றநிலை உருவானதுடன் பொலிஸாரும், இராணுவப் படையினரும் கூடி பதற்ற நிலையை வழமைக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் பின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு தாக்குதல் நடத்திய சிவில் படையினர் மூவரும் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.