பக்கங்கள்

02 மே 2010

கொலை அச்சுறுத்தல் காரணமாக யாழ் பேரணி நிறுத்தம்.


யாழ்ப்பாணத்தில் இன்று காலை மக்கள் சக்தி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கடத்தல் காணாமல் போதல் கொலைகள் மற்றும் பயமுறுத்தலகளுக்க எதிராக நடைபெற விருந்த ஊர்வலம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.மக்கள் சக்தி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த ஊர்வலத்திற்க்கான அனுமதியை, படைத்தரப்பு குறிப்பாக பொலிசார் அனுமதி வழங்கி இருந்ததாகவும் இன்று காலை அதறக்கான அனுமதியை பொலிசார் மேலிடத்தின் உத்தரவுக்கு அமைவாக மீளப் பெற்றுள்ளதாகவும் ஏற்பாட்டாளரான க.குமாரவேல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.காலையில் தனக்கு இனம் தெரியாத நபர்களிடம் இருந்து தொலைபேசி மூலம் கொலை பயமுறுத்தல் விடப்பட்டதுடன் தனது குடும்பத்தவர்களை கடத்தப் போவதாக கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் குறிப்பாக பொலிசார் அனுமதி வழங்காமையாலும் தொடர்ந்து இத்தகைய அச்சுறத்தலகள் விடப்பட்டமையாலும் தாம் இந்தப் ஊர்வலத்தை நிறுத்துவததாக அவர் தெரிவித்துள்ளார்.இன்று காலையில் ஊர்வலம் ஆரம்பமாவதாக இருந்த யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்புறத்தில் அதிக எண்ணிக்கையான பொலிசாரும் மற்றும் இராணுவத்தினர் படைகளின் புலனாய்வாளர்களும் குவிக்கப்பபட்டு
இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.