பக்கங்கள்

08 மே 2010

வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் என்ன நடைபெறுகிறது?இன்ன சிற்றிபிரஷ்.

வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகளை அனுமதிக்க சிறீலங்கா அரசு மறுத்து வருவம் நிலையில் அங்கு ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்கள் குழந்தைகளை பிரசவித்து வருவதாக ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்து இரு மாதங்கள் கடந்துள்ளன. ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவடைந்து செல்கின்றன.
இதற்கிடையில் ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி லியாம் பெஸ்கோவின் விஜயம் தொடர்பில் இன்றுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் ஆலோசனைக்குழுவை பான் கீ மூன் அமைக்கப்போவதில்லை என ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிநிதி பாலித கோகன்னா தெரிவித்துள்ளார். ஆனால் ஆலோசனைக்குழு அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கருத்துக்களை கூறமறுத்துள்ள ஐ.நா உயர் அதிகாரி ஒருவர் சிறீலங்காவில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் பெஸ்கோ ஆராய்ந்து அது கருத்தில் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறீலங்கா அரசினால் நடத்தப்படும் புனர்வாழ்வு முகாம்களுக்கு செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் செல்வதற்கு சிறீலங்கா அரசு அனுமதிகளை மறுத்து வருகின்றது.
ஆனால் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்கள் குழந்தைகளை பிரசவித்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்கள் குழந்தைகளை பிரசவித்து வருவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மூன்றாஅனைத்துலக நாணயநிதியம் விதித்த நிபந்தனைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்றததால் அனைத்துலக நாணயநிதியம் தனது உதவித் தொகையின் வது கொடுப்பனவை நிறுத்தி வைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.