கொழும்பு கொம்பனித்தெருவில் வீடுகள் உடைக்கப்பட்டதை எதிர்த்து இன்று பிற்பகல் வேகந்த பள்ளிவாசல் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. கடுமையான மழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இது தொடர்பாக இம்மன்றத்தின் அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஷரப்தீன் கருத்துத் தெரிவிக்கையில், "அரசாங்கத்தின் அடக்குமுறைக்குத் தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. இன்று கொம்பனித் தெருவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடுடைப்பு கொழும்பு முழுவதிலும் வியாபிக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஜும்மா தொழுகைக்குப் பின்னர் வேகந்த பள்ளிவாசல் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.