தமிழர்களுக்கான விடியலுக்காகவும் மேன்மைக்காகவும் பாடுபட்டு வரும் நாம் தமிழர் இயக்கமானது வரும் மே 18 முதல் அரசியல் இயக்கமாக மாறுகின்றது.இதன் தொடக்கமாக இன எழுச்சி அரசியல் மாநாடு மதுரையில் நடக்க இருக்கின்றது.அப்பொழுதே அது அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட இருக்கின்றது.சென்ற ஆண்டு நம் இனத்தை அழித்தொழித்ததாக சிங்கள ஏகாதிபத்தியமும் அதற்கு துணை போன வல்லாதிக்கங்களும் இதே மே 18 ல் அறைகூவல் விடுத்தன.ஆனால் நாம் வீழவில்லை.துளிர்த்தெழுவோம் என்பதை ஊருக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டிய தருணம் இது.அதற்காக நாம் அனைவரும் மே18 ல் மதுரையில் சங்கமிக்கின்றோம். ஆன்றோரும் சான்றோரும் நம்முடன் வருகின்றார்கள்.இத்தருணத்தில் தமிழர்களாகிய நாம் அனைவரும் அவர்களுடன் இணைந்து வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர் என்னும் முழக்கத்துடன் மதுரையை முற்றுகையிடுவோம்.
வாருங்கள் தமிழர்களே!
நம் இனம் ஆண்ட இனம் யாருக்கும் அடிமையாகாது என்பதை உணர்த்துவோம்.
வாருங்கள் தமிழர்களே!
நம் இனம் ஆண்ட இனம் யாருக்கும் அடிமையாகாது என்பதை உணர்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.