பக்கங்கள்

10 மே 2010

அவுஸ்திரேலியா சென்ற படகு கவிழ்ந்து ஐந்து ஈழத்தமிழர்கள் பலி?


ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக சென்ற 64 இலங்கைத் தமிழர்களின் படகு பழுதடைந்ததால், கடலில் மூழ்கி 5 பேர் பலியாகி வி்ட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படிப் படகு ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த போது பழுதடைந்தது. நடுக்கடலில் சிக்கித் தவித்த இவர்களை நேற்று முன்தினம் அந்த வழியே சென்ற ரஷ்ய கப்பல் ஒன்று மீட்டது. அதில் 59 பேர் மட்டுமே இருக்கக் காணப்பட்டனர். 5 பேரைக் காணவில்லை. அவர்கள் அணிந்திருந்த உயிர்காப்பு கவசங்கள் அந்தப் பகுதியில் மிதந்தன. மீட்கப்பட்ட பயணிகளுடன், அவர்கள் வந்த படகையும் கட்டி இழுத்துச் சென்ற ரஷ்ய கப்பல், நேற்று காகஸ் தீவை அடைந்தது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலிய முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காணாமல் போன 5 தமிழர்களும் பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.