கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் முதல் லிங்க் தெருவைச் சேர்ந்தவர் சந்தியாகு. இவரது வீட்டில் அமலி, லலிதா இருவரும் வாடகைக்கு குடி இருந்து வருகிறார்கள்.
அமலியின் கணவர் பால் சுந்தர்ராஜ். இவர்களுக்கு ஏஞ்சல் (7), எலிசபெத் (3) ஆகிய குழந்தைகள் உள்ளன.
லலிதா கணவரைப் பிரிந்து தனியாக வசிக்கிறார். அவரது சகோதரர் கஜேந்திரன். பால் சுந்தர்ராஜ்வேலைக்கு சென்ற பிறகு அமலியும், லலிதாவும் பல மணி நேரம் ஒன்றாகபேசிக்கொண்டிருப்பார்கள். இந்த நட்பு அமலிக்கு மிகவும் பிடித்துப்போனது.
இதனால் அமலிக்கு லலிதாவை பிரிய மனம் இல்லை. அவரை தனது கணவருக்கு கட்டி வைத்துவிட்டால் லலிதா தன்னுடனே இருப்பார் என்று அமலி திட்டமிட்டார். தனது திட்டத்தை லலிதாவிடம் கூறினார்.
இதையறிந்த கஜேந்திரன், அமலியிடம் சென்று, எனது அக்காளை உன் கணவருக்கு திருமணம் செய்து வைக்க கூடாது இதை மீறினால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
ஆனாலும் அமலி தன் முயற்சியை கைவிடவில்லை. திருமண ஏற்பாட்டில் மும்முரமாக இருந்தார். இதனால் வேதனை அடைந்த கஜேந்திரன் விஷம் குடித்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையறிந்த அமலி இனி லலிதாவை கணவருக்கு திருமணம் செய்து வைக்க முடியாதே என்ற வேதனையில் 2குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்தார். மயங்கி நிலையில் கிடந்த அவர்கள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபற்றி கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், அமலி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.