யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நேற்றிரவு வெள்ளை வானில் அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் தாக்கப்பட்டு. பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் வட்டக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதான புலேந்திரன் என்பவராவார். நேற்றிரவு 8.00 மணியளவில் இவர் வீட்டில் இருந்த வேளை, வெள்ளை வானில் வந்த சிலர், தங்கள் உறவினர் ஒருவர் சுகவீனமுற்று இருக்கின்றார், அவரைப் பார்க்க வரும்படி கூறி புலேந்திரனை அழைத்துச் சென்றதாகவும், சங்கானை பகுதியில் வைத்து அவரைக் கடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டுக்கு அருகில் அழைத்து வந்து மீண்டும் அவரைத் தாக்கிய போது அயலவர் கூக்குரலிடவே, கடத்தல்காரர்கள் அவரை விட்டுவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.