முன்பெல்லாம் எமது ஊரில் கோவில் திருவிழாக்கள்,நாடகங்கள்,இல்லையேல் வேறு ஏதாவது விழாக்கள்என்றால் எமக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்,வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் விழா பற்றிஅறிவிப்பு செய்து கொண்டு வருவார்கள்,அப்போதுதுண்டுபிரசுரங்களை வீசுவார்கள்,அந்த துண்டுபிரசுரங்களை எடுப்பதற்காக வாகனங்களின் பின்னால்சிறுவர் பட்டாளம் நாமும் ஓடுவோம்,அதனால் எமக்குள்ளும் அடிபாடுகள் வரும்,சிலவேளைகளில்ஓடி விழுந்து இரத்தமும் வரும்,யார் கூட நோட்டீஷ் எடுக்கிறதெனும் போட்டி நிலவும்,இப்போ அவற்றை நினைக்கும் போது மிகவும்மகிழ்வாக இருக்கிறது,இப்பவும் எமது ஊரில் அப்படித்தான் இன்றைய சிறுவர்கள்இருக்கிறார்களா?அல்லது எல்லாமே மாறிவிட்டதா என்றுஎமது ஊரைப்பற்றியே தெரியாத வாழ்க்கை வாழ்கிறோம்,மே 4ல் கொடியேற இருக்கும் இந்தன் முத்து விநாயகர்ஆலய திருவிழா நினைவுக்கு வந்ததும்,எமது அன்றைய வாழ்வும் நினைவுக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.