பக்கங்கள்

11 மே 2010

கரவெட்டியில் கடத்தப்பட்ட பெண் கத்திக்குத்து காயத்துடன் மீட்பு!



உறவினர் ஒருவரால் வெள்ளை வேனில் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்படும் கரவெட்டி சம்பந்தர் கடையடியை சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணம் வல்லைவெளியில் இருந்து மீட்கப்பட்டார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வி. லங்காதேவி என்ற இந்த பெண்ணை கடத்தியவர்கள், வல்லைவெளியில் வைத்து இவரின் கழுத்தில் கத்தியால் குத்திய பின்னர் இறந்துவிட்டதாக எண்ணி கிடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை ஈச்சம்பழம் பிடுங்கச்சென்ற சிறுவர்கள் சிலர் இந்த பெண்ணை கண்டு கிராமசேவகருக்கு தெரிவித்ததன் பின்னர் அவர் மீட்கப்பட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.