பக்கங்கள்

06 மே 2010

பிரிட்டனில் பதினேழாவது பொதுத் தேர்தல்.







இரண்டாவது உலகப்போரின் பின்னரான பிரித்தானியாவின் 17 ஆவது பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 4222 ஆசனங்களுக்காக 15,785 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பிரித்தானியாவில் உள்ள 100 தொகுதிகளில் இன்றைய தேர்தல்கள் நடைபெறுகின்றன. தேர்தலில் ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 89 பேரில் 30 பேர் கன்ஸர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். . குறிப்பாக கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தேர்தலில் அதிகமாக பங்கேற்கின்றனர். இறுதியாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 68 பேர் போட்டியிட்டனர். அதேவேளை, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் 15 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இன்று நடைபெறும் தேர்தலில் 55 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என பிபிசி நடத்திய ஆய்வு உறுதி செய்துள்ளதாக அதன் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.கன்ஸர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்றைய தேர்தலில் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 2200 வாக்களிப்பு நிலையங்களில் 44 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.