பக்கங்கள்

06 மே 2010

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிட தமிழர்கள் சிறிலங்கா அதிகாரிகளை சந்திக்க மறுப்பு!



அவுஸ்ரேலியாவுக்குப் புகலிட தஞ்சம் கோரிச் சென்று, பின் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எவரும் இலங்கை அதிகாரிகளைச் சந்திக்க விரும்பவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்தார். தாம் அகதிகளாக அல்லாமல் சிறைக்கைதிகளாக நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தமை குறித்து, அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார். மேற்படி அகதிகள் தொடர்பில், இலங்கை அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பும் இணைந்து இவர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முனைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, அகதிகள் பற்றிய புலன் விசாரணைகள் முடியும் வரை, அவர்களைச் சந்திக்க இலங்கை அரசாங்கத்திற்கு மலேசிய அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி, 31 பேரும், 24 ஆம் திகதி 75 பேருமாக 106 இலங்கை அகதிகள் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.