பக்கங்கள்

02 மே 2010

முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி சிலையிலிருந்து தண்ணீர் கொட்டியதாக பரபரப்பு!


ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதை அறிந்ததும் அதிர்ச்சி-துக்கத்தில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்து போனார்கள்.அவரது படத்தை பொது மக்கள் தங்கள் பூஜை அறையில் வைத்து தெய்வமாக வழிபடுகின்றனர். அவரது ஆட்சி காலத்தில் ஒரு கோடி ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் ஏராளமான அணைகள் கட்டி உலகையே ஆந்திராவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். ஆந்திர மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்த ராஜசேகரரெட்டிக்கு மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் அவருக்கு கோவில் கட்டும் பணியும் நடந்து வருகிறது.இந்நிலையில் கடப்பா மாவட்டம் பலப்பனூரில் உள்ள ராஜசேகரரெட்டி சிலையின் வாய் பகுதியில் இருந்து நேற்று திடீரென தண்ணீர் கொட்டியது. இடது கையில் இருந்தும் தண்ணீர் வடிந்தது.இதையறிந்ததும் கிராம மக்கள் கூட்டமாக சென்று வேடிக்கை பார்த்தனர். அப்போது சிலர் சிலையில் இருந்து வடிந்த நீரை போட்டி போட்டு பிடித்தனர். பின்னர் அதை புனித நீர் என்று கூறி குடித்தனர். தலையிலும் தெளித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.