பக்கங்கள்

12 மே 2010

பகிரங்க மடலுக்கு எஸ்.ஜெயானந்த மூர்த்தி அவர்களின் பதில் மடல்!



பிரித்தானியா, வடமேற்கு லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினராக அதிக வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு, பிரித்தானியாவிலிருந்து தமிழர் ஒருவர் அனுப்பிய பகிரங்க மடலுக்கு உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அனுப்பியுள்ள பதில்....
அன்புடன் மாறன்.
உங்கள் திறந்த மடல் பார்த்தேன். மிகவும் சந்தோசம். என்னைப் பொறுத்தவரை நான் கொள்கையிலும் தேசியத்திலும் இருந்து விலகப்போவதில்லை. நான் அதில் உறுதியோடு இருக்கின்றேன். அத்துடன் எவரும் என்னை பகடைக் காயாக நடத்த முடியாது. ஏனெனில் நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். மக்களின் ஆணைக்கே நான் தலைவணங்குவேன்.
அதேவேளை என்னைப் பொறுத்தவரை நாடுகடந்த அரசில் இருந்து யாரையும் ஒதுக்குவதோ அல்லது ஓரங்கட்டுவதோ எனது நோக்கமல்ல. அவ்வாறான எண்ணம் என் மனதில் என்றுமே இல்லை. இந்த நாடு கடந்த அரசாங்க அமைப்புப் பணியில் காலநேரம் பாராது உழைத்தவர் திரு.உருத்திரகுமார் என்பதும் எனக்குத் தெரியும்.
எனவே இதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன், கொள்கையில் உறுதியுடன் செயற்படுவதன் மூலமே எமது இலட்சியத்தை இதன் ஊடாக அடைய முடியம். இதில் நான் உறுதியாக உள்ளேன்.
நன்றி எஸ்.ஜெயானந்தமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.