அன்பார்ந்த உலகத்தமிழினமே!நாம் இதயங்களிலே வலிகளை சுமந்தவாறுதான்பல்லாண்டுகளாக துயருற்று இருக்கின்றோம்,ஆனாலும்மே 18 என்பது அந்த வலிகளுக்கும் அப்பாற்பட்ட மாபெரும்கொடூரத்தை எம்மனங்கள் அனுபவித்த நாள்,வரலாற்றில் மறக்க முடியாத,எம்மனங்களிலிருந்து எடுக்கமுடியாத ஒரு நாள்,உலகிலே எந்த ஒரு பாதகனும் செய்திருக்காத மாபதகத்தைபிணந்தின்னி பேய்களான மகிந்தசகோதரர்களும்,அவர்களதுநேசநாட்டு பேய்களும் செய்து முடித்தார்கள்,முள்ளிவாய்க்காலிலே இறந்தவர்கள் இறந்துபோக,தமதுஅங்கங்களை இழந்தவர்களும்,உயிருக்கு போராடிக்கொண்டிருந்தசின்னஞ்சிறு குழந்தைகளிலிருந்து,தாத்தா பாட்டிமார்வரை,புலம்பெயர் உறவுகளான எம்மை நோக்கி அபயக்குரல்எழுப்பிக்கொண்டிருந்தார்கள்,எம்மை நம்பிக்கொண்டேபலர் அங்கு மடிந்து போனார்கள்,நாமும் அவர்களை காத்திடலாம் என்ற நம்பிக்கையுடன்ஒவ்வொரு நாட்டு அரசுகளினது வாயில்களிலும் இரவுபகலாக கிடந்து எம் உறவுகளை காத்திடுங்கள் என கெஞ்சினோம்கதறினோம்,பட்டினி கிடந்தோம்,எவனுமே எம்மைகண்டுகொள்ளவில்லை,முள்ளிவாய்க்காலிலே எல்லாமே அரங்கேறி முடிந்தது,எம்மினத்தை காக்க முடியாத பாவிகளாயானோம்,இன்று அவர்களை நினைந்து தலைகுனிந்துகண்ணீர் வடிக்கின்றோம்,மடிந்து போன எம் உறவுகளே நீங்கள் நிம்மதியாய்உறங்குங்கள்,உங்கள் கனவுகளை நிச்சயம் நாம் நனவாக்குவோம்,எம் தமிழினமே இந்த நாளிலாவது பகமைகளை துறந்துஒன்றுபடுவோம்,தமிழனுக்கான தாயகத்தை நிறுவுவோம்,
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.