யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் பாழடைந்த காணியொன்றிலிருந்து வயோதிபர் ஒருவருடைய சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிச் சந்தியில் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் கோண்டாவிலைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை (வயது 65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இன்று காலை பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்றிரவு முதல் காணாமல் போயிருந்ததாகவும் இவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் இவர் சடலமாக இன்று அதிகாலை கண்டுபிடிககப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் கையில் இரண்டு மோதிரம் சங்கிலி என்பவற்றை அணிந்திருந்ததாகவும் தற்போது அவை காணாமல் போயிருப்பதாகவும் அவரது முகத்தில் இரத்த காயங்கள் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.