இலங்கையில் பிறந்தவர்களும் வெளிநாட்டவர்களும் இலங்கை கடவுச்சீட்டு அல்லாத எவரும் இலங்கை செல்வதானால் இணையம் ஊடாக வீசாவுக்கு இன்றில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதனை இன்று இலங்கை அரசு அங்குரார்பணம் செய்து வைத்துள்ளதுடன் இணையத்தளத்தையும் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் பிறந்தவர்கள் இலங்கைக்கு இணையம் ஊடாக வீசா எடுத்து பயணம் செய்வதற்கு தடை விதிக்கபட்டுள்ளது.
குறித்த இணையத்தில் பல மொழிகள் உள்ளது. குறித்த ஒரு மொழியை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் கொடுக்க வேண்டும் அதன் அடுத்த பக்கமான 03ம் பக்கத்தில் விண்ணப்பிக்கவும் என்ற பக்கத்தில் விண்ணப்பத்தை மேற்கொள்ள வேண்டும்.
அங்கு நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிறந்த திகதிகளை கொடுத்து அடுத்த கேள்வியாக எந்த நாட்டு கடவுச் சீட்டு என கேட்கபடுகிறது.
நீங்கள் உதாரணமாக பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் தமிழராக அல்லது சிங்களவாராக இருந்தால் அடுத்தது எங்கு பிறந்தாய் என கேக்கிறது. அதற்குள் இலங்கை என்பது அகற்றபட்டுள்ளது. ஆனால் இலங்கையில் பிறந்துவிட்டு சோமாலியாவில் பிறந்ததாக எழுதிவிட முடியாது.
ஆனால் குறித்த இணையத்தின் வடிவமைப்பு படி இலங்கை எனவும் குறிப்பிட முடியாது ஆகவே இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் எவரும் இலங்கைக்கு போகமுடியாது.
காரணம் இன்றில் இருந்து இணையம் ஊடாக மட்டுமே பயணம் செய்ய முடியும். அதற்கும் அப்பால் இந்த கேள்விக்கு விடை கொடுக்காமல் அடுத்த பக்கத்திற்கு போகவும் முடியாது.
ஆகவே இணையத்திற்குள்ளும் இலங்கையில் பிறந்தவர்கள் போகாதபடியும் இலங்கைக்குள்ளும் இலங்கையர் போகாதபடியும் இலங்கை அரசின் குடிவரவு குடியகழ்வு இணையம் வடிவமைக்கபட்டுள்ளது.
இணையத்தள முகவரி: http://www.eta.gov.lk/visainfo/apply.jsp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.