யாழ்ப்பாணத்தில் நேற்று இரண்டு சடலங்கள் பொலிசாரால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த இரு சடலங்களும் கொழும்புத்தறை மற்றும் யாழ் நகர் பகுதியில் பொலிசாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்புத்துறை பற்றைக்காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பிரான்சிஸ் றேமன் வயது 35 என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இதேவேளை மதுவை அளவிற்கு அதிகதாக அருந்தியதால் 43 வயதுடைய நபர் ஒருவர் மதுச்சாலைக்கு முன்பாகவே வீழ்ந்து பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த ஆறுமுகம் காந்தமோகன் என்பவரே பலியானவராவார். குறித்த நபர் நேற்று மாலை கஸ்தூரியார் வீதியிலுள்ள மதுச்சாலையில் மதுவருந்திவிட்டுச் செல்லும்போதேபலியானதாகத்தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.