யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு சிங்கள மொழி வகுப்புக்களை நடத்துவதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த பொலிஸ் உயரதிகாரி நேற்று சனிக்கிழமை காலை கைது செய்யப்ட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு கிழமை நாட்களில் சிங்கள மொழி வகுப்புக்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்குள் நடைபெற்றுவருகிறது.
வழமையாக நடைபெறும் சிங்கள மொழி கற்பிற்கும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தமிழ் பெண் பொலிஸாருடன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண் பொலிஸார் தனது பெற்றோரிடம் மேலதிகாரியின் பாலியல் நடத்தை சம்பந்தமாக தெரியப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெண் பொலிஸாரின் பெற்றோர் யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தலுவத்தயிடம் முறையிட்டதை அடுத்து குறித்த பொலிஸ் உயரதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிகாரியின் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட பெண் பொலிஸார் தற்பொது பொலிஸ் உத்தியோகத்தை விட்டு விலகியள்ளதாக தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.