கொலன்னாவை முல்லேரியா பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பாளருமான ஆர்.துமிந்த சில்வாவின் குழுவினருக்கும் ஜனாதிபதி ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் குழுவிற்கும் இடையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா கோட்டே ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார்.
துமிந்த சில்வாவின் தலை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.