பக்கங்கள்

06 அக்டோபர் 2011

கப்பம் கோரிய யாழ்,வாசிகள் கைது!

25 இலட்சம் ரூபா கப்பம் தராவிட்டால் இரு குழந்தைகளையும் கடத்திச் சென்று கொலை செய்யப் போவதாக வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழர்களை குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு போன்ற பிரதேசங்களிலுள்ள பொதுத் தொலைபேசிகளைப் பயன்படுத்தித் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் கோரி அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளனர். அத்துடன் இவர்கள் முன்னர் அச்சுறுத்தல் மூலம் கப்பத் தொகையாக ஐந்து இலட்சம் ரூபா பெற்றிருந்தமையும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.