ஊர்காவற்துறை கடற்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை வழமை போன்று கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் சடலம் ஒன்று மிகவும் உருக்குலைந்த நிலையில் கரையடைந்திருந்ததைக் கண்டு அப்பகுதியில் நின்ற கடற்படையினரிடம் தெரிவித்தனர். கடற்படையினர் ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து ,பொலிசார் குறித்த சடலத்தை அடையாளங் காண்பதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.